சர்வதேச யோகா தினத்துடன் இணைந்து கண்டியில் உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சப்ரகமுவ மாகாண சபை இணைந்து ஏற்பாடு செய்த யோகா நிகழ்ச்சி அண்மையில் சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சர்வதேச யோகா தினத்துடன் இணைந்து கண்டியில் உள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் சப்ரகமுவ மாகாண சபை இணைந்து ஏற்பாடு செய்த யோகா நிகழ்ச்சி அண்மையில் சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பலாங்கொடை பெலிஹூல்ஓயாவை சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.
மே.மா/ களனி எச்.கே. தர்மதாச கல்லூரி மாணவர்களுடன், Green Team – Kelaniya அமைப்பு இணைந்து முன்னெடுக்கப்பட்ட காக்கை தீவு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றதாக கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தமன்கடுவ பிரதேச செயலகத்தில் E-மக்கள் தொகை பதிவு திட்டத்தின் கீழ் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் பணி நேற்று (17) உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது.
அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அந்த அமைச்சின் உள்ளக சேவைகள் மற்றும் இராஜதந்திர சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வெளிநாட்டுத் தூதுக்குழு சேவைகளை டிஜிட்டல் முறையில் நிர்வகித்தல், விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் தூதரக சேவைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான முறையான பொறிமுறையை நிறுவுதல் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்து இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயனாளிகளுக்கு தகவல் மற்றும் சேவைகளுக்கான சிறந்த பிரவேசத்தை உறுதிசெய்து, பயனாளிகள் - நட்பு இணைய இடைவழிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களும் இதன்போது வலிறுத்தப்பட்டன.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ ஆவணங்களை சமர்ப்பித்தல் போன்ற நடைமுறைகளை இலகுபடுத்தும் செயற்பாட்டு நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. இந்தச் மறுசீரமைப்புகள் நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து, பயனாளிகளின் வசதியை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில்,டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசாத் பியசேன, தூதரக விவகாரங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம்
நிர்மல பரணவிதான, மக்கள் இராஜதந்திரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதில் மேலதிக பொது முகாமையாளர் (சர்வதேச விவகாரங்கள்) பீ.ஜீ.ஜீ.எஸ். யாப்பா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிறந்த பௌதிகவியலாளரும் கல்வி மேலாண்மைத் தலைவருமான பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளை நேற்று (17) பொறுப்பேற்றார்
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் பிரதேச செயலகங்கள் ஊடாக ஆன்லைன் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி நிதியத்தின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகார சபை (PIBA) தெரிவித்துள்ளது.
பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதி செய்வது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான விடயமாகும்.
மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) சுற்று வேலி தொடர்பான தற்போதைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நேற்று (ஜூன் 17) கூட்டமொன்று நடைபெற்றது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் யானைகள் ஊடுருவுவதால் சுற்று வேலிக்கு ஏற்படும் தொடர்ச்சியான சேதங்கள் குறித்து இந்த கூட்டத்தின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் வாழ்க்கை முறையாக மாற வேண்டும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் செயற்பட வேண்டும் – இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் தனுஷா பண்டார
நேர்மையான அரசாங்க சேவையை நோக்கி நகரும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தினால் 2025 பெப்ரவரி 18ஆம் திகதி வெளியிடப்பட்ட PS/SB/Circular/2/2025 இலக்க சுற்றறிக்கைக்கு அமைய பாராளுமன்ற உள்ளக அலுவல்கள் பிரிவை அமைப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]