All Stories

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அரச அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் முதலாவது கூட்டம் இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்

கதிர்காம யாத்திரை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காம பூஜை தளத்திற்கு வரும் பக்தர்களுக்கான ஆலோசனைகள்

எதிர்வரும் கதிர்காம யாத்திரைக் காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காம புனித பூமிக்கு வருகை தரும் பக்தர்கள் பொலித்தீனைப் பயன்படுத்தாது யாத்திரையை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் அமைச்சர் வைத்திய தம்மிக பட்டபெந்தி பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (18) சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
கதிர்காம புனித பூமியை தரிசிப்பதற்கு இந்த வருடத்தில் 30,000 இற்கும் அதிகமானோர் பாத யாத்திரைக்காக வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் பாத யாத்திரை நாளை (20) ஆரம்பமாக உள்ளது

சம்பிரதாய பூர்வமாக ஒவ்வொரு வருடமும் இந்தப் பாத யாத்திரைக்காக பக்தர்கள் கலந்து கொள்வதுடன் இவ்வாறு சுற்றாடல் நேயமாக பொலித்தீன் , பிளாஸ்டிக் பயன்படுத்தாது இந்த யாத்திரையை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து யாழ மற்றும் குமண வனப் பூங்காக்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பாரம்பரிய பாதயாத்திரையை சூழல் நேயத்துடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு இதன் போது அமைச்சர் பக்தர்களிடம் கோரிக்கை விடுத்ததுடன், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் பாவனையின்றிய பசுமை பாத யாத்திரையாக மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அதன்படி இம்முறை பாதையாத்திரையில் பங்குபற்றும் யாத்திரிகர்கள் சூழல் கட்டமைப்பிற்கு மற்றும் வனப் பூங்காக்களில் வாழும் விலங்குகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் செயல்படுமாறும் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி கோரிக்கை விடுத்தார்.

இங்கு கருத்து தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாறசிங்க, பாதயாத்திரைக்காக குமண மற்றும் யாழ பூங்காக்கள் ஊடாக பயணிக்கும் யாத்திரிகர்களுக்காக பாதுகாப்பை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்றும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் எடுத்துச் இல்லாதிருக்குமாறும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

கதிர்காம யாத்திரை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காம பூஜை தளத்திற்கு வரும் பக்தர்களுக்கான ஆலோசனைகள்

எதிர்வரும் கதிர்காம யாத்திரைக் காலப்பகுதியில் பொலித்தீன் பாவனையின்றி செயற்படுவதற்கு நடவடிக்கை

எதிர்வரும் கதிர்காம யாத்திரைக் காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காம புனித பூமிக்கு வருகை தரும் யாத்திரிகர்கள் பொலித்தீனைப் பயன்படுத்தாது யாத்திரையை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் கதிர்காம யாத்திரைக் காலப்பகுதியில் பொலித்தீன் பாவனையின்றி செயற்படுவதற்கு நடவடிக்கை

துருக்கிய குடியரசு கடற்படையின் 'TCG BÜYÜKADA' தனது உத்தியோகப்பூர்வ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தீவிலிருந்து புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்த துருக்கியக் கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாஹுவுடன் கூட்டு கடற்படைப் பயிற்சியின் பிறகு 2025 ஜூன் 18 ஆம் திகதி தீவை விட்டுப் புறப்பட்டது.

துருக்கிய குடியரசு கடற்படையின் 'TCG BÜYÜKADA' தனது உத்தியோகப்பூர்வ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தீவிலிருந்து புறப்பட்டது

09 வது சீன - தெற்காசியக் கண்காட்சி ஆரம்பம்

இம்முறை கண்காட்சியின் தொனிப்பொருள் நாடு இலங்கை
9 ஆவது சீன - தெற்காசிய கண்காட்சி இன்று (19) தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் தலைநகரான குன்மிங்ஹில் ஆரம்பமானது.

09 வது சீன - தெற்காசியக் கண்காட்சி ஆரம்பம்