அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள, சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் தென்னை பயிர்செய்கை சபை ஆகியவை நேற்று (21) சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் பலுகஸ்வெவ தோட்டத்தில் பல திட்டங்களை நடத்தின.
வட மாகாணத்தில் 2023 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் திறமையை வெளிப்படுத்திய 300 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பரிசுத்தொகை
இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) சமீபத்தில் சீனாவின் செங்டுவில் இடம் பெற்றது.
சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதே வேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தினார்.
2025 ஜூன் 22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
இந்த வருட இறுதிக்குள் 1800 கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்வதே இலக்கு என்ற ‘‘கிராமிய வீதி அபிவிருத்தி தேசிய திட்டத்தை’ இன்று (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
‘‘கிராமிய வீதி அபிவிருத்தி தேசிய திட்டத்தின்” கீழ் அவிஸ்ஸாவெல்ல தேர்தல் தொகுதியில், சீதாவாக பிரதேச செயலாளர் பிரிவில், கொஸ்கம தெற்கு கடுகொட புஸ்ஸெல்ல வீதியின் அபிவிருத்தி வேலைகள் அமைச்சரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வீதியின் அபிவிருத்திக்காக அறுபத்தைந்து மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்படும். அத்துடன் இணைந்ததாக நாடு முழுவதும் 57 கிராம வீதிகளின் பணிகள் இன்று (2025.06.21) ஆரம்பிக்கப்பட்டன. 14,000 மில்லியன் ரூபாய் திட்டத்தின் மொத்த மதிப்பீடாகும்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் :
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய 5000மில்லியன் ரூபாய் மேலதிக நிதி கிராமிய வீதிகளின் அபிவிருத்திக்காக வழங்கப்பட்டுள்ளது.
இலக்குடைய அபிவிருத்தியினால் மக்களின் வாழ்க்கையை அழகு படுத்துவதற்காக செலவிடப்படும். அவிஸ்ஸாவெல்ல நகர் பூரணமான நகரமாக அபிவிருத்தி செய்யப்படும்.
பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தை நிறுவி, பொது மக்களுக்கு கிடைக்கும் வசதிகளை அதிகரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராமத்தை உருவாக்கும் அபிவிருத்தித் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பை குறைவின்றி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பணம் அல்லது அதிகாரத்தினால் வாழ்வை இழந்த சமூகத்திற்கு, பௌத்த தத்துவத்தின் மூலம் ஆன்மிக வாழ்வு அளிக்க முடியும் - ஜனாதிபதி
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் பிரதேச செயலக மட்டத்தில் வழங்கும் செயற்பாட்டை, உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (21) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது
கல்வி அமைச்சின் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மற்றும் தேசிய விருது வழங்கும் நிகழ்வு நேற்று (20) கல்வி அமைச்சில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தலைமையில் இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கி(ADB) இலங்கைப் பிரதிநிதி தகபுமி கடோனோ மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC) பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்று (ஜூன் 20) ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை முகவர் நிலையத்தில் இடம்பெற்றது.
2025 ஜூன் மாதம் 21 ஆம் திகதி வானிலை முன்னறிவிப்பு
பாதுகாப்புப் பிரிவினரும் வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து முறையான நடவடிக்கை
கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
காட்டு யானைகளின் பிரச்சினை அதிகமாக உள்ள அநுராதபுரம், புத்தளம், பொலன்னறுவை, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, குருநாகல், பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்சினைகள் குறித்து மாவட்ட செயலாளர்களால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்கள், வாகனத் தேவைகள் மற்றும் கடமைகளை முன்னெடுப்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொறிமுறையை மேலும் வினைத்திறனாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, அடுத்த மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தந்த மாவட்டங்களில் இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுக்களை நியமிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
வனஜீவராசிகள் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கிய ஜனாதிபதி, இதன் துரித நடவடிக்கையாக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை குறித்த பயிற்சிகளுடன் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இணைத்துக்கொள்வதற்கும், அதற்கான சட்டங்களை உருவாக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
காட்டு யானைகளின் பிரச்சினைக்கு தீர்வு காண, பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகளை முறைமைப்படுத்தவும் வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]