பாராளுமன்ற உரைபெயர்புத் துறைக்கு ஆற்றிய சிறந்த பணிக்காக பாராளுமன்ற முன்னாள் பிரதான உரைபெயர்ப்பாளரும் முன்னாள் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளருமான எம்.கே. ராகுலனுக்கு பாராட்டு

பாராளுமன்ற உரைபெயர்புத் துறைக்கு ஆற்றிய சிறந்த பணிக்காக பாராளுமன்ற முன்னாள் பிரதான உரைபெயர்ப்பாளரும் முன்னாள் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளருமான எம்.கே. ராகுலனுக்கு பாராட்டு
நிறுவனங்கள் குறித்தும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அறிந்துகொள்ளும் நோக்கில் இலங்கைக்கு கல்விசார் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 25.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தனர்.
இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவியில் தற்போதுள்ள வெற்றிடம் மற்றும் ஏற்படவுள்ள வெற்றிடங்களையும் நிரப்பும் பொருட்டு தகைமையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தின் www.parliament.lk என்ற இணையத்தளத்தில் கிடைக்கக்கூடிய ‘இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்திற்கு உறுப்பினர்களை நியமித்தல்’ எனும் இணைப்பிலுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு 2025 ஜுலை 11 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பப்படவேண்டும்.
விண்ணப்பங்களை, அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே; எனும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அல்லது
கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாக ‘இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்திற்கு உறுப்பினர்களை நியமித்தல்’ எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
இணைப்பு: https://www.parliament.lk/.../sec.../advertisements/view/333
நிலவும் பாதகமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பான சூழ்நிலையில், 2025 ஜூன் 25 ஆம் திகதி தலைமன்னாருக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் பகுதியில் உள்ள ஏழாவது மணல் திட்டுக்கு அருகே இந்திய கடற்பரப்பிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் மிதந்து வந்து கடலில் கவிழ்ந்த இந்திய படகு ஒன்றில் இருந்த நான்கு (04) மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவை இராணுவத் தலைமையகத்தில் 2025ஜூன் 25அன்று சந்தித்தார்.
இராணுவ மரபுகளின்படி நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகளிடையே முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன், மேலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை இராணுவ மற்றும் கடற்படையின் முக்கிய பங்களிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சகோதரப் படைகளுக்கு இடையேயான பிணைப்பு மற்றும்சேவை ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
எமது நாட்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் (Research & Development ) துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் ஏற்கனவே பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்(Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க குடியரசின் முன்னாள் ஜனாதிபதி தபோ ம்பெக்கி (Thabo Mbeki) இடையிலான சந்திப்பு நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
2025 ஜூன் மாதம் 27ஆம் திகதி வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூன் மாதம் 27ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வில் கலந்துகொள்வதற்காக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே தலைலமையிலான இலங்கை பாராளுமன்றக் குழுவினர் சீன மக்கள் குடியரசுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். சீன மக்கள் குடியரசின் வணிக அமைச்சின் அனுசரணையுடன் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த செயலமர்வு ஜூன் 20ஆம் திகதி முதல் ஜூலை 06ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.
கதிர்காம எசல மஹோற்சவத்துடன் இணைந்ததாக, “Clean Sri Lanka” கருத்திட்டத்தின் கீழ் பிரதேச சபை வளாகத்தில் இன்று (26) காலை சமூக விழிப்புணர்வு மற்றும் நகர சுத்தம் செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.
Clean Sri Lanka செயலகம் மற்றும் கதிர்காம பிரதேச சபை இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதோடு இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்து, Clean Sri Lanka பணிப்பாளர் தசுன் விஜேசேகர, Clean Sri Lanka கருத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தினார். பயணிகள், வர்த்தக சமூகம் மற்றும் பக்தர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து வந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களின் பங்கேற்புடன், இந்த திட்டம் எசல மஹோற்சவத்தின் கடைசி நாளான ஜூலை 10 ஆம் திகதி வரை,கதிர்காமம், செல்லக்கதிர்காமம் மற்றும் வெடிஹிடிகந்த ஆகிய இடங்களில் முன்னெடக்கப்படும்.
எலிபண்ட் ஹவுஸ் நிறுவனம் இதற்கு முழுமையாக நிதியுதவி அளிக்கிறது.
மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர் தர்மபால ஹேரத், Clean Sri Lanka செயலக பணிப்பாளர் அஞ்சுல பிரேமரத்ன, பாடசாலை மாணவர்கள்,தொண்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கதிர்காமம் சுற்றுச்சூழல் இளைஞர் சங்க இளைஞர் யுவதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]