நாட்டிற்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடுகள் இன்றி மருந்துகளை வழங்குவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டிற்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடுகள் இன்றி மருந்துகளை வழங்குவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் புலம்பெயரும் தொழிலாளர் சமூகத்திற்கு, தரமான பயிற்சியை வழங்குவது குறித்து தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (2025.01.20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவின் ஆலோசனைக்கு இணங்க கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால் இன்று (20) நடைபெறவிருந்த பரீட்சை பாடங்கள் 2025.01.25 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளன.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தெதுறுஓயா ஆற்றுப் படுகை யின் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக தெதுறுஓயாவின் நீர்மட்டம் வெள்ள அனர்த்தம் ஒன்றை ஏற்படுத்தும் நிலையை அண்மித்துள்ளது.
மேலும் ஓயாதெதுறு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் வான் கதவுகள் தற்போது நிமிடத்திற்கு 16000 கன அடி வேகத்தில் தெதுறுஓயாவிற்கு அனுப்பப்படுகிறது. தற்போது நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீர் கொள்ளளவைப் பொறுத்து, எதிர்காலத்தில் இந்த அளவை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.
இந்நிலை காரணமாக ஆற்றுப் படுகையில் உள்ள வாரியபொல, நிகவரெடிய, மஹவ, கொபெயிகனே, பிங்கிரிய, பள்ளம், சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் றஸ்னாயகபுர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாயம் காணப்படுகின்றது.
இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'தூய இலங்கை' தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]