All Stories

களனிவெலி புகையிரத வழி ஒதுக்கப்பட்ட இடங்களிலுள்ள குடியிருப்பாளர்களை மீள்குடியமர்த்துவதற்கு அனுமதி

கொழும்பு நகர்ப்புற புகையிரத வீதிப் புனரமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் மாளிகாவத்த லொக்கோ சந்தியிலிருந்து பாதுக்க புகையிரத நிலையம் வரைக்குமான புகையிரதப் பாதை ஒதுக்கிடங்களில் சட்டவிரோதக் குடியிருப்பாளர்களுக்கான வீடுகளை வழங்கி அல்லது நட்டஈடு வழங்கி மீள்குடியமர்த்துவதற்காக 2024.08.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

களனிவெலி புகையிரத வழி ஒதுக்கப்பட்ட இடங்களிலுள்ள குடியிருப்பாளர்களை மீள்குடியமர்த்துவதற்கு அனுமதி

அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடவடிக்கைகள் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம வின் தலைமையில் சொறிக்கல்முனை 01 கிராமத்தில் நேற்று (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அஸ்வெசுவ நலன்புரி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக பல படிமுறைகளை நீதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்தியதுடன், அதன் இறுதி படிமுறையாக அஸ்வெசும நலன்புரிக்காக விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று தகவல் சேகரிக்கும் பணிகள் ஜனவரி 21 முதல் 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீரையடி குளம் கிழக்கு படையினரால் சீரமைப்பு

18 வது விஜயபாகு காலாட் படையணி படையினர், 2025 ஜனவரி 19 அன்று சேதமடைந்த வீரையடி குளத்தை வெற்றிகரமாக சீரமைத்தனர். மேலும் மண்அரிப்பு மற்றும் சேதத்தைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் படையினர் மண் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்த உடனடி நடவடிக்கையானது சுற்றியுள்ள சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க உதவியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீரையடி குளம் கிழக்கு படையினரால் சீரமைப்பு

CResMPA திட்டம் குறித்து கலந்துரையாட உலக வங்கி பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் சந்திப்பு

உலக வங்கியின் பிராந்திய நாட்டு இயக்குநர் (மாலத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை) டேவிட் சிஸ்லன் தலைமையிலான உலக வங்கி தூதுக்குழு குழு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (ஜனவரி 20) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தது.

CResMPA திட்டம் குறித்து கலந்துரையாட உலக வங்கி பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் சந்திப்பு

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு தீர்மானம்

2019 ஆம் ஆண்டில் க.பொ.த (உயர்தரம்) பெறுபேறுகளின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் முதலாவது மருத்துவக்கற்கை மாணவர் அணியினருக்கான மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சிகள் 2025 யூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

தெற்காசிய தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ நிறுவகத்தில் (SAITM ) காணப்படுகின்ற வசதிகளைப் பயன்படுத்தி மொரட்டுவைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு மற்றும் மருத்துவக்கற்கை மாணவர்களின் மருத்துவமனை உள்ளக சிகிச்சைப் பயிற்சிக்காக மருத்துவர் நெவில் பெர்னாந்து மருத்துவமனையின் வசதிகளைப் பயன்படுத்துவதற்கும் இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு தீர்மானம்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 

மழை நிலைமை:

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை