All Stories

 வானிலை முன்னறிவிப்பு

காலி, மாத்தறை,களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை,மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 வானிலை முன்னறிவிப்பு

பிரதமர்  மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளருக்கிடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Marc - Andre Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பெப்ரவரி 04 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.

பிரதமர்  மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளருக்கிடையில் சந்திப்பு

கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சிபாரிசு தொடர்பான கலந்துரையாடல் 

கொலன்னாவை வெள்ளத்தினைக் கட்டுப்படுத்துவதற்காக சிபாரிசுகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட  சிபரிசுகள் மற்றும் அதற்கு இணங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (4) இடம்பெற்றது.

கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட சிபாரிசு தொடர்பான கலந்துரையாடல் 

2025 றமழான் காலத்தில் விசேட விடுமுறை

இம்முறை 2025 றமழான் (ராமசான்) காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

2025 றமழான் காலத்தில் விசேட விடுமுறை

கடவுச் சீட்டு அச்சிடுவதை துரிதப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக பணியாளர்களை வழங்கல்

தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.

கடவுச் சீட்டு அச்சிடுவதை துரிதப்படுத்துவதற்குத் தேவையான மேலதிக பணியாளர்களை வழங்கல்

உள்நாட்டு தெங்குசார் உற்பத்தி தொழிற்றுறை மற்றும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்

200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்நாட்டு தெங்குசார் உற்பத்தி தொழிற்றுறை மற்றும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும் (துஐஊயு) இடையிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜப்பான் கடன் ஒப்பந்தங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்