தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த மத தொடர்புகளை வலுப்படுத்துவது பற்றி முன்மொழிவு

தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த மத தொடர்புகளை வலுப்படுத்துவது பற்றி முன்மொழிவு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜப்பானின் நிப்பொன் மன்றத்தின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் அவரது புதல்வியினால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தினால் எடுக்கப்படக்கூடிய அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி தேசிய வளர்ச்சித் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தெற்காசியாவின் மிகப் பழமையானதும், நாட்டின் மிகப்பெரியதும், மிக முக்கியமானதுமான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்ட பின்னர், நிறுவனத்தின் அனைத்துத் துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடலில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அரச உத்தியோகபூர்வ பொறிமுறையின் மற்றும் தனியார் துறையின் நிறுவன வரையறைகளுக்கு அப்பால் காணப்படும் கூட்டுக் குழுவின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் ஊடாக அனுபவங்களைப் பெற்று நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட 2025 பெப்ரவரி 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் தளபதியுமான கௌரவ திரு அனுரகுமார திஸாநாயக்க அவர்களை சந்தித்தார்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா, 2025 பிப்ரவரி 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (நாளை) பண்டாரநாயக்க ஞாகபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நெமீபியா குடியரசின் உயர்ஸ்தானிகாரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும், இலங்கையில் பாதுகாப்பு ஆலோசகராகவும் செயற்படும் கெப்டன் Lisias Kondjeni Kangandjela, 2025 பெப்ரவரி 05 கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இலங்கைக்கு கிழக்கே திருகோணமலை ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவரை உடனடியாக வெளிநாட்டு கப்பலின் பங்களிப்புடன் தரையிறக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடற்டையினரால் 2025 பெப்ரவரி 06 அன்று அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அரசாங்கத்தின் தொடர்ச்சியான 'சுத்தமான இலங்கை' முயற்சியின் ஒரு பகுதியாக, முப்படைகளும் சிவில் பாதுகாப்பு படையினர் (CSD), கொழும்பு மாநகர சபை (CMC) மற்றும் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை இணைந்து இன்று (பெப்ரவரி 6) காலை பேரா ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்திகரிப்பு பணியை மேற்கொண்டனர்.
Royal Australian Naval Academy இல் 2024 செப்டெம்பர் 23 முதல் டிசம்பர் 13 வரை நடைபெற்ற அடிப்படை நீரியல் அளவீட்டு பாடநெறியில் பங்கேற்ற இலங்கை கடற்படையின் ஆர்பிஜி சிந்தக XS 114053 மாலுமி அந்த பாடநெறியின் சிறந்த மாலுமிக்கான 'DUX' விருதையும் வெனின் நினைவுப் பரிசையும்(WAINING MEMORIAL PRIZE) வென்றார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]