2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நேற்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நேற்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு எந்தவொரு அரசாங்கத்திடமும் முறையான கொள்கை இல்லாததே தேங்காய் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்று பிரதமர் நேற்று (05) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இலங்கை பொறியியல் படையணியின் பிரிகேடியர் டபிள்யூ.எஸ் கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவ தலைமையகத்தின் இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராகவும் இராணுவ பேச்சாளராகவும் 2025 பெப்ரவரி 05 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (SLRCS) பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஷ் குணசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (பெப்ரவரி 03) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலி, மாத்தறை,களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை,மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர இணைப்பாளர் திரு. மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Marc - Andre Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பெப்ரவரி 04 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.
கொலன்னாவை வெள்ளத்தினைக் கட்டுப்படுத்துவதற்காக சிபாரிசுகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட சிபரிசுகள் மற்றும் அதற்கு இணங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (4) இடம்பெற்றது.
இம்முறை 2025 றமழான் (ராமசான்) காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நீக்குவதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணித்தியாலயங்கள் மேற்கொள்வதன் மூலம் நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்கள் வீதம் வெளியிடுவதற்கான வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காயச்சில் துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிநாட்டுக் கடன் மீள்கட்டமைப்புச் செயன்முறைக்கமைய இலங்கை அரசுக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையிலான பரிமாற்றுப் பத்திரம் மற்றும் இலங்கை அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை நிறுவகத்திற்கும் (துஐஊயு) இடையிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மன்னார் மாவட்ட மருத்துவமனையில் திடீர் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டுமானம் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பட்டுள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]