All Stories

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க எரிசக்தி அமைச்சின் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க

படைத்தளபதி 3 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள், 2025 ஜனவரி 31 அன்று 3 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம் செய்தார்.

படைத்தளபதி 3 வது இலங்கை சிங்க படையணிக்கு விஜயம்

பராஒலிம்பிக் விளையாட்டுகளில் உலக சாதனை படைத்த சமித்த துலானிற்கு புதிய ஈட்டி

பாரிஸ் 2024ம் ஆண்டு உலக பரா ஒலிம்பிக் விளையாட்டுகளில் எப்44 ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 67.03 மீற்றர் தூரம் எறிந்து, வெள்ளி பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவணையற்ற அதிகாரி II சமித்த துலான் கொடித்துவக்கு அவர்களிற்கு புதிய ஈட்டி ஒன்று பிரதமரினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஜனவரி 29ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது.

பராஒலிம்பிக் விளையாட்டுகளில் உலக சாதனை படைத்த சமித்த துலானிற்கு புதிய ஈட்டி

வானிலை முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வானிலை முன்னறிவிப்பு

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக   மொஹமட் லபார் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல கருணாரத்ன, ஓய்வுபெறுவதற்கு முந்திய விடுமுறையை பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஒருவர் அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்படும் வரை இந்த நியமனம் நடைமுறையில் இருக்கும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025.02.02

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக   மொஹமட் லபார் தாஹிர் நியமனம்