All Stories

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சில  நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுதற்காக அங்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று  (31)  யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பொறியியல் பீடத்தின் கட்டடத் தொகுதியை பிரதமர் பார்வையிட்டார்

மத்தேகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் புதிய பொறியியல் பீடத்திற்கான கட்டடத் தொகுதி அண்மையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்  நிர்மாணிக்கப்பட்டு வரும் பொறியியல் பீடத்தின் கட்டடத் தொகுதியை பிரதமர் பார்வையிட்டார்

“சுவசரிய” அம்பியுலன்ஸ் சேவைக்கான புதிய முன்னேற்றத் திட்டம்

துரித தொலைபேசி அழைப்பின் ஊடாக இலவசமாக முழுமையான முன் வைத்தியசாலை சேவைகளை வழங்கும் நாட்டின் சகல மாகாணங்களையும் இணைத்து செயற்படும் “சுவசரிய” அம்பியுலன்ஸ் சேவையை மேலும் பரவலாக்குதல் மற்றும்  முன்னேற்றுவதற்காகவும்,  அச்சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளை வழங்கி, வினைத் திறனான சேவையாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக புதிய திட்டத்தின் கீழ் “சுவசரிய” அம்பியுலன்ஸ் சேவை பணியாற்றுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ராஜகிரியில் அமைந்துள்ள சுவசரிய அம்பியுலன்ஸ் சேவை மத்திய நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை வெளியிட்டார். 

இதன் போது சுவசரிய அம்பியுலன்ஸ் சேவையின் தற்போதைய செயற்பாடுகளை அமைச்சர் மேற்பார்வை செய்தார். 

சுகாதார மற்றும் வெகுஜன  ஊட அமைச்சு

“சுவசரிய” அம்பியுலன்ஸ் சேவைக்கான புதிய முன்னேற்றத் திட்டம்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஜனவரி 29ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவித்தல்

2025 ஜனவரி 31ஆம் திகதிக்கான காலநிலை முன்னறிவித்தல்
2025 ஜனவரி 31ஆம் திகதி காலை 5.30மணிக்கு வெளியிடப்பட்டது

 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

 வானிலை முன்னறிவித்தல்

77ஆவது சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் சிறப்பாக நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார்…

77ஆவது சுதந்திர தின நினைவு விழாவை குறைந்த செலவில் சிறப்பாக நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார் என்றும், இம்முறை வைபவத்தின் செலவுகளைக் குறைத்து, கண்ணியம் மற்றும் கம்பீரத்தைப் பாதுகாத்து நடாத்தவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெரிவித்தார்.

77ஆவது சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் சிறப்பாக நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும்  தயார்…