All Stories

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ. சீ. என். தலங்கம மற்றும் வட மத்திய மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுகான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவுக்கு அனுதாபச் செய்தி

மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (TNA) ஒரு முக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்த கௌரவ சேனாதிராஜா அவர்கள், இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட அதே வேளையில், தனது மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஒரு முன்னணிப் பங்கை வகித்தார். ஜனநாயக நடவடிக்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான அரசியல் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கை ஆகியவை பாராளுமன்றத்தில் அவரது பல தசாப்த கால சேவைக் காலத்தில் சிறப்பாக பிரதிபலித்தது.

அவரது மறைவு அவரை அறிந்த மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு அவர் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய என பிரார்த்திக்கிறேன்.

ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவுக்கு அனுதாபச் செய்தி

மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவுக்கு அனுதாபச் செய்தி

மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவுக்கு அனுதாபச் செய்தி

மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் – வடக்கில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, மக்களுக்கான காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையானது பிரதேச மக்களுக்கு நன்மையளிக்கும் வேகையில் அபிவிருத்தித் திட்டத்திற்காக முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.
• பொலிஸ் பதவி வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்

• பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறையில் கைத்தொழில் வலயங்களை நிறுவுவதில் கவனம் செலுத்துதல்

• மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசியல் அதிகாரம் மற்றும் அரச பொறிமுறை ஒத்துழைக்க வேண்டும்

மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் – வடக்கில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, மக்களுக்கான காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

இறைபதமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

அரச அலுவலகர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சிப் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களின் மொழித்துறையை விருத்தி செய்யும் நோக்கிலும், கடமைகளை திறம்பட நடாத்தி செல்வதற்கும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அரச மொழிகள் திணைக்களத்தினால் மொழிப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரச அலுவலகர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சிப் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு