இந்த ஆண்டு இதுவரையில் நாட்டில் சுமார் 5,459 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
'தேசிய மறுமலர்ச்சி' என்ற தொனிப்பொருளில் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையினர் 25 தடவைகள் துப்பாக்கி சூட்டு வணக்கங்கள் செலுத்தி நாட்டுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டலின் பேரில், இன்று (2025 பெப்ரவரி 04) மதியம் 1200 மணி அளவில் சயுர கப்பலின் கட்டளை அதிகாரி,கெப்டன் சந்தன பிரியந்தவினால் வழிநடத்தப்பட்டது.
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான 'KRI DIPONEGORO - 365' என்ற போர்க்கப்பல் நேற்று (2025 பெப்ரவரி 04,) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 03) சந்தித்தார்.
மழை நிலைமை:
காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊழியர் சேமலாக நிதியச் சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறைகள் தொடர்பாக தொழில் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ருவாண்டா உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் திருமதி ஜாக்குலின் முகங்கிரா பெப்ரவரி 03ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.
"கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகதாக சுதந்தர தினத்தை கொண்டாடுகிறோம்" - ஜனாதிபதி ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க
77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இஸ்லாமிய சமய நிகழ்வு
77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இன்றைய தினம் (04) வெள்ளவத்தை ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வு இடம்பெற்றது.
"தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிறள்வோம் என்ற கருப்பொருளின் கீழ், 77வது தேசிய சுதந்திர தின விழா, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பெருமையுடன் நடைபெற்றது.
இம்முறை நாம் சிறப்பான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் நாட்டின் மத்தியிலும் வாழும் மக்கள் எதிர்கால வளமான இலங்கை நாடு, நவீன இலங்கை தேசம் ஒன்றிற்காக கனவு காணும் தருணத்திலேயே நாம் இன்று சுதந்திரத்தை கொண்டாடுகிறோம்.


