All Stories

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் Healthy Sri Lanka திட்டத்தின் ஆரோக்கிய நடமாடும் மருத்துவ முகாம் பாலிந்தநுவரயில்

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் Healthy Sri Lanka திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஆரோக்கிய நடமாடும் மருத்துவ முகாம் பாலிந்தநுவர கெலின்கந்த கொஸ்குலன கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் (30) நடாத்தப்பட்டது.

 

அங்கு கண் சிகிச்சை முகாம், மகப்பேறு சிகிச்சை முகாம், பல் சிகிச்சை முகாம், ஆயுர்வேத சிகிச்சை முகாம், நீரிழிவு சிகிச்சை முகாம், இரத்த அழுத்த பரிசோதனை, ECG பரிசோதனை, கொலஸ்ட்ரால் பரிசோதனை, கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவ சேவைகளைப் பெற்றனர்.

 

அனைத்து நோய் பரிசோதனைகளுக்குப் பிறகு சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டதோடு, மேலதிக சிகிச்சை தேவைப்படும் நபர்கள் தொடர்புடைய வைத்தியசாலை கிளினிக்குகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். கண் பரிசோதனைகளுக்குப் பிறகு கண்ணாடி தேவையான நபர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் சவி லெண்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆண்ட்ரி பெரேராவின் பூரண அனுசரணையில் விநியோகிக்கப்பட்டன.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், தேசிய மக்கள் சக்தியின் பிரதான செயலாளர் மருத்துவ நிபுணர் நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது. தமது அன்றாட வாழ்க்கையில் வாழ்க்கையைச் செலவிடும்போது தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதில்லை என்றும், சுகாதார சேவைகளுக்கு குறைந்த அணுகல் வாய்ப்பு பெற்ற மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கெலிங்கந்த கொஸ்குலனில் வாழும் மக்களுக்கு, இந்த நடமாடும் மருத்துவ முகாம் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாகும் என்றும் இந்த விழாவில் தனது கருத்துக்களை தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்க ரங்கநாத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைக்கு ஏற்ப, செழிப்பான குடிமக்களை உருவாக்கும் செயல்முறையில், ஆரோக்கியமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்காக அதிக உழைப்பை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நடமாடும் மருத்துவ முகாம் அந்த திட்டத்தை வெற்றிகரமாக்கும் முக்கியமான வாய்ப்பாகவும், அதை களுத்துறை கெலின்கந்தப் பிரதேசத்திற்கு கொண்டு வர முடிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தோனேசியாவின் தூதுவர் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி டெவி குஸ்டினா டோபிங் (Dewi Gustina Tobing) உடனான சந்திப்பு நேற்று (01) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது.

இந்தோனேசியாவின் தூதுவர் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இடையே சந்திப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தொடர்பாக போலியாகத் தயாரிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் செய்தி குறித்து ஊடக அறிவித்தல்

 

வெளிநாட்டில் உள்ள இலங்கையில் பல்வேறு அமைப்பு ரீதியான குற்றங்களும் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே எனும் பெயருடைய நபர் உட்பட்ட குழுவினர் அண்மையில் இந்தோனேசியாவில் இருந்து இலங்கை பொலிஸாரினால் இந்தோனேசியா பொலிஸாரின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினால் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது இச்செயற்பாட்டில் கலந்து கொண்டன இலங்கை மற்றும் இந்தோனேஷியாவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு நினைவுச்சின்னம் மற்றும் அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்வு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்றது.

 

ஆனால் இது தொடர்பாக போலியாக தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் போன்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பாக, அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் புகைப்படம் எனக் கூறப்படும் ஒரு போலி புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 

குறிப்பாக, அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் புகைப்படம் எனக் கூறப்படும் ஒரு போலி புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 

விசேடமாக அனைத்து ரீதியான குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பிற்காக விசேட தேடுதல் நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதுடன் உண்மையான சரியான தகவல்களை மாத்திரம் சமூகம் மற்றும் ஏனைய ஊடகங்களில் வெளியிடுமாறு சகல ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பாவனையாளர்களையும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகத்தில் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 2025.08.30 ஆம் திகதி இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டார். அதன் போது இந்தோனேஷிய பொலிஸ் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

 

 

இச்செயற்பாட்டில் கலந்து கொண்ட இலங்கைப் பொலிஸ் அதிகாரிகளுக்காக அவசியமான உதவிகளை வழங்கிய இந்தோனேசியா பொலிஸாருக்கு நன்றி தெரிவிக்கும் சிறிய நிகழ்வு
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றதுடன் அதன் போது பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் ப்ரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தொடர்பாக போலியாகத் தயாரிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் செய்தி குறித்து ஊடக அறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஓகஸ்ட் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வடமேல் மாகாணத்திலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (31ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் பத்தலங்குண்டு, மதவாச்சி, ஹொரவப்பொத்தானை மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தூதுக் குழுவினர் இந்தியா விஜயம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் முதற்கோலாசானும், இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான கௌரவ (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினர் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பையேற்று ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தூதுக் குழுவினர் இந்தியா விஜயம்

“தேசிய ஆராய்ச்சி முன்னுரிமை அறிக்கை” ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு

எமது நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, அரசாங்கத்தின் சமூக-பொருளாதார அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் “இலங்கைக்கான ஆராய்ச்சி முன்னுரிமைகள் – 2026” அறிக்கை, நேற்று (28) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

“தேசிய ஆராய்ச்சி முன்னுரிமை அறிக்கை” ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு