2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய (High-Speed Broadband) வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து மக்களுக்கும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்
அனைத்து தரப்பினரும் ஒன்றாக கலந்துரையாடி தீர்வை எட்ட வேண்டும்
- ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
களுத்துறையிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் வர்த்தகர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறப்பட்ட முறைப்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பில், வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் நோக்கில், ஒரு கிலோ பூண்டை ரூபா 135/- விலையில் ஒரு தனியார் தரப்பினருக்கு 54860 கிலோ பூண்டை விற்றதன் மூலம் ரூபா 17,006,600 /- இழப்பினை நிறுவனத்திற்கு ஏற்படுதியமை, அதற்கு உதவி ஒத்தாசை புரிதல் மற்றும் சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையயாளர் (நிதி) மற்றும் இரு வர்த்தகர்கள் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 2026.02.12 அன்று காலை முறையே 9.00 மணி மற்றும் காலை 9.14 மணிக்கு மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் நடாத்தப்பட்ட விசாரணை தொடர்பில், மோட்டார் வாகனத் திணைக்களம் 17.02.2017 அன்று பதிவு இல GZ-6889 கொண்ட மோட்டார் வாகனத்தை மாற்ற முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
மேற்படி முறையற்ற அனுமதியை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்தில் தற்போது பணியாற்றி வரும் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் கார் பரிமாற்றப் பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் 12.02.2026 அன்று மு.ப 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவரால் இரண்டு அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், சபையினால் செயல்படுத்தப்பட்ட கண்டி வடக்கு பாத்ததும்பர ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் ஒப்பந்தப் பணத்திலிருந்து ஒரு டொயோட்டா பிராடோ SUV ரக ஜீப் வண்டி வாடகை அடிப்படையில் பி.என். ஆட்டோ ஹோல்டிங் என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் விதிகளை மீறி செயல்பட்டு, குறித்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியமை, குறித்த வாகனம் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை சரிபார்க்காமல், முறையான பற்றுச்சீட்டு பெறாமல் வாடகைப் பணமாக சுமார் ரூபா 12,750,000/- மேற்படி நிறுவனமான விநியோகஸ்தருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
கொள்முதல் விதிகளை மீறி செயல்பட்டு, மேற்படி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பினை ஏற்படுத்தி ஊழல் குற்றம் புரிந்தமை மற்றும் அந்தக் குற்றத்தைச் செய்ய சதி செய்த குற்றச்சாட்டின் பேரில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஓய்வு பெற்ற பொது முகாமையாளர் ஒருவர் 2026.02.12 அன்று மு.ப 9.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 2026 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் மாகாண அலுவலகங்கள் மற்றும் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் என்பன, 2026 பெப்ரவரி 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்திருக்கும் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
2026 பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் நடைபெறவிருக்கும் க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தேசிய அடையாள அட்டையின் தகவல் உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மட்டுமே குறித்த அலுவலகங்கள் அவ்வாறு திறந்திருக்கும். (தொடர்புடைய கடிதத்தை ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.drp.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலமும் பதிவிறக்கம் செய்யலாம்).
2026 பெப்ரவரி 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 பெப்ரவரி 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]