மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கொழும்பு மகாநாம கல்லூரி மற்றும் பொலன்னறுவை தம்மின்ன மகா வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தால் அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று (22) வாய்ப்பு கிடைத்தது.
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (SLIATE) நடத்தும் இரண்டு உயர் தேசிய டிப்ளோமா கற்கைகளான கணிய அளவையியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDQS) மற்றும் ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா (HNDE) ஆகியவற்றிற்கு NVQ மட்டம் 6 இற்கு சமமான தரச் சான்றிதழை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன், விங் கமாண்டர் (ஓய்வு) புலஸ்தி வீரசிங்க மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் நிதி உதவியுடன், குருநாகல், கோகரெல்ல, ஹிதான, ஸ்ரீ விமலராம புராண விஹாரையில் நிறுவப்பட்ட மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 ஜூலை 16 ஆம் திகதி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 17 ஆம் திகதி கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் இரண்டு (02) சந்தேக நபர்களையும் மீன்பிடி படகொன்றையும் (01) கைது செய்தனர்.
இலங்கை கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் சிறப்புப் படை ஆகியவை 2025 ஜூலை 05முதல் 19 வரை கடுகண்ணாவ, அலதெனிய, தவுலகல, கம்பஹா, கட்டுநாயக்க, நிலாவெளி, திருகோணமலை மற்றும் மன்னார், நடுகுடா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகளின் போது, பத்து (10) கிராம் நாற்பது (40) மில்லிகிராம் ஐஸ், பதினோராயிரத்து எண்ணூற்று அறுபது (11860) வெளிநாட்டு சிகரெட்டுகள், இருநூற்று அறுபத்து நான்கு (264) மாத்திரைகள் மற்றும் முப்பத்து மூன்று (33) மாத்திரை போத்தல்கள், ஐந்து (05) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் குஷ் போதைப்பொருள்கள், நூற்று நான்கு (104) கிராம் கேரள கஞ்சாவுடன் பத்து (10) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
Centrum Marine மற்றும் Perter Dohle Schiffahrts – KG இணைந்து செயல்படுத்திய “She Can Sail the Seas” திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த 09 பெண் கெடட்டுகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவாக்குவின் தலைமையில் நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் (18) பதுளை புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அனுராதபுர மாவட்டத்தின் பண்டுல மகா வித்தியாலய மாணவர்களுக்கு இன்று (21) கிடைத்தது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, 20 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவராகப் பணியாற்றிய மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டார்
• அடுத்த ஆண்டு மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு ஒரு புதிய வார்டு வளாகம் வழங்கப்படஉள்ளது.
அறிவுசார் சொத்துரிமை, புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனமான உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (WIPO) நடத்தப்பட்ட விருது விழாவில், 2025 ஆம் ஆண்டுக்கான WIPO சர்வதேச விருதை வென்ற கலாநிதி நதீஷா சந்திரசேன, ஜூலை 21 அன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்தார்.
ஜனாதிபதி விருதை வெற்றிகொண்ட 332 சாரண மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் அண்மையில் (19) கம்பஹா புனித சிலுவை கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]