All Stories

நுவரெலியா வசந்த விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது

நுவரெலியா வசந்த விழா நேற்று (01) காலை அழகான கலாச்சார அம்சங்கள் மற்றும் பாடசாலை இசைக்குழுக்கள் உட்பட பல அம்சங்களுடன் தொடங்கியது.

நுவரெலியா வசந்த விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது

கித்துள், தென்னை மற்றும் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டம்

அரசாங்க கொள்கைகளை செயற்படுத்தும் வகையில் இலங்கையில் கித்துள், தென்னை மற்றும் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, கித்துள், தென்னை மற்றும் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காக வருடாந்தம் புதுப்பிக்கத்தக்க வகையில் விபத்து ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை செயற்படுத்த கமநல மற்றும் கமநல காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது.

கித்துள், தென்னை மற்றும் பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டம்

நாட்டில் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கு பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது

நாட்டில் புற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் செயல்படுத்தப்பட்ட தேசிய கொள்கை திட்டத்தை ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவை சமீபத்தில் சுகாதார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியது.

நாட்டில் புற்றுநோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கு பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் தவிசாளர் குழு உறுப்பினர்களுக்கு அனுபவப் பகிர்வு தொடர்பான செயலமர்வு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் சபைக்குத் தலைமை தாங்கும் தவிசாளர் குழு உறுப்பினர்களுக்காக வெஸ்மினிஸ்டர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனுபவப் பகிர்வு தொடர்பான செயலமர்வு கடந்த மார்ச் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நீர்கொழும்பில் நடைபெற்றது. இலங்கைப் பாராளுமன்றம் மற்றும் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முக்கிய பங்குதாரர்கள் பாராளுமன்றத்தின் நடைமுறைகளைப் பலப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு பெறுமதிமிக்க தளமாக இந்த இரண்டு நாள் செயலமர்வு அமைந்தது.

இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுண ஆரச்சி, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோர் இலங்கைப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையின் பிரதிச் சபாநாயகர் யூடித் கொமின்ஸ், மக்களவையின் முன்னாள் பிரதிச் சபாநாயகர் டோன் பிரைமரோலோ, ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கென்னெத் டொனால்ட் மக்கென்டொஷ் ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இதில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு அமைய தலைமைதாங்கும் அதிகாரிகளின் வகிபாகம் தொடர்பில் பல்வேறு தலைப்புக்களின் கீழ் இந்தச் செயலமர்வில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. தலைமைதாங்கும் அதிகாரிகளின் பதவிநிலை உருவான வரலாறு, அவர்களின் வகிபாகம், அதில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிகள் பற்றியும், நேரமுகாமைத்துவம், பாரம்பரியங்கள், நெறிமுறைகள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுடனான உறவுகள் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் பற்றியும் இதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், ஐக்கிய இராச்சிய பாராளுமன்றதின் நடைமுறை உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்டவாக்கச் செயற்பாடுகளை முகாமைத்துவம் செய்வதில் காணப்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் என்பன குறித்தும் இங்கு ஆராயப்பட்டது. இலங்கைப் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள், நடைமுறைகள், பாரம்பரியங்கள் என்பன குறித்து இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர விரிவான விளக்கத்தை வழங்கினார்.


கௌரவ சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் தூதுக் குழுவினருடன் நேரடியான கலந்துரையாடல்களை நடத்தியமை இந்தச் செயலமர்வின் முக்கியமான அம்சமாக அமைந்தது. இலங்கையின் சட்டவாக்கச் செயற்பாடுகளில் தவிசாளர் குழாமின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு மாற்றியமைக்கக்கூடிய பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஆழமான புரிதலை இந்தக் கலந்துரையாடல்கள் எளிதாக்கின.
இரண்டாவது நாள் அமர்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கௌரவ அன்ரூ பற்ரிக் இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டமை இந்த நிகழ்வுக்கு மேலும் வலுச்சேர்த்தது.

இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் தவிசாளர் குழு உறுப்பினர்களுக்கு அனுபவப் பகிர்வு தொடர்பான செயலமர்வு

உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டுக்கு உலக வங்கி உதவும்முகமாக கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளமைக்கு உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நன்றி தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் நிபுணத்துவக் குழுவுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி

ஒன்றினைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி