All Stories

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2026 ஜனவரி 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்துள்ளது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

 

மழை நிலைமை: 

 

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

காற்று : 

 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

காலியிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

 

கடல் நிலை: 

 

காலியிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2026 ஜனவரி 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜனவரி 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டின் வானிலையில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தி வருகின்றது. எனவே, ஜனவரி 05ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

"FACETS Sri Lanka - 2026" சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி ஆரம்யம்...

"FACETS Sri Lanka - 2026" சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி இன்று (03) கொழும்பில் உள்ள சினமன் லைப் ஹோட்டலில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகியது.

"FACETS Sri Lanka - 2026" சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி ஆரம்யம்...

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணையைத் திருத்துதல் மற்றும் கல்விப் பணியாளர்களைப் பயன்படுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல் கையேடு

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணையைத் திருத்துதல் மற்றும் கல்விப் பணியாளர்களைப் பயன்படுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல் கையேடு இந்த அமைச்சினால் இன்று (2) வெளியிடப்பட்டது.

தொடர்புடைய அறிவுறுத்தல் கையேடு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கால அட்டவணையைத் திருத்துதல் மற்றும் கல்விப் பணியாளர்களைப் பயன்படுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல் கையேடு