All Stories

புதிய ஆயுர்வேத ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றவர்கள் கடமைகளை ஆரம்பித்தனர் 

புதிய ஆயுர்வேத ஆணையாளராக ஏ. எம்.ஜி.ஆர். தீப்தி சுமனசேன மற்றும் உதவி ஆணையாளராக வைத்தியர் எம். டபிள்யூ. பத்மகுமார ஆகியோர் நியமனம் பெற்று இன்று (06) காலை தமது உத்தியோகபூர்வ பணிகளை மகரகம நாவின்னையில் அமைந்துள்ள ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் அலுவலகத்தில் ஆரம்பித்தனர்.

புதிய ஆயுர்வேத ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றவர்கள் கடமைகளை ஆரம்பித்தனர் 

நலன்புரி நன்மைகளுக்கு தகுதியானவர்களின் விவரங்களைப் புதுப்பிப்பித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான “அஸ்வெசும” அரசாங்க நலன்புரி நன்மைகளைப் பெறத் தகுதி பெற்ற மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் விவரங்களைப் புதுப்பித்தல் நடவடிக்கைகளை இன்று (06) முதல் ஆரம்பிக்க  நலன்புரி நன்மைகள் சபை  தீர்மானித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்தார்.

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடு​முறை

அரசாங்க திணைக்களமும் முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கான பல்வேறு பயிற்சிநெறிகளை முன்னெடுக்க உடன்பாடு

அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06.11.2025) வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

அரசாங்க திணைக்களமும் முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கான பல்வேறு பயிற்சிநெறிகளை முன்னெடுக்க உடன்பாடு

“Youth Link – Sri Lanka” நிகழ்ச்சி தொடர் நாளை (07) யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் ஐந்து நாட்கள் நீடிக்கும் “Youth Link – Sri Lanka” நிகழ்ச்சி தொடர் நாளை (07) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகின்றது.

“Youth Link – Sri Lanka” நிகழ்ச்சி தொடர் நாளை (07) யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத் தொகுதியை நிருமாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது 

மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத் தொகுதியின்  முதல் கட்ட நிருமாணத்திற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தலைமையில் அண்மையில் (04) இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாணத்தின்  142 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிருமாணிக்கப்படும் இந்த வைத்தியசாலை விடுதிக் கட்டிடத் தொகுதி முதல் கட்டம் 2026 நவம்பர் மாதத்தில் முடிவுறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் ஹேரத்,  சப்ரகமுவ மாகாண சபையின் பிரதம அமைச்சின் செயலாளர், மாவனல்லை வைத்திய சாலைப் பணியாளர், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர், உட்பட வைத்தியசாலைப் பணியாளர்கள், மாவனல்லை, அரநாயக்க பிரதேச மக்கள் உட்பட பெருந்திரளானவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கேகாலை மாவட்ட ஊடகப்பிரிவு

மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத் தொகுதியை நிருமாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது