All Stories

சுகாதார நிபுணர்களை அவர்களின் தொழில்சார் வாழ்க்கையின் தேவைகளை பூரணப்படுத்துவதன் மூலம், இந்த நாட்டு மக்களுக்கு வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்க முடியும்..

நாட்டின் வினைத்திறனான சுகாதார சேவையின் மூலம் நோயுற்ற மக்களுக்கு தங்கள் சேவைகளை வழங்கும் சுகாதார நிபுணர்களை தற்போது பாதிக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதும், அவர்களுக்கு தேவையான சிறந்த தொழில்சார் சூழலை உருவாக்குவதும் சுகாதார அமைச்சின் நோக்கமாகும். இதன் விளைவாக, நிபுணர்கள் தங்கள் தொழில்சார் வாழ்க்கையின் திருப்தி அடைவார்கள், இதன்மூலம் அவர்களிடம் இருந்து திறமையான மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளைப் பெற முடியும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ  அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

 

அரசாங்க மருந்து கலவையாளர் சங்க அதிகாரிகள் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போது சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது. 

 

அரசாங்க மருந்து கலவையாளர் சங்க அதிகாரிகள் அவர்களின் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் சேவைகளை மேற்கொள்வதில் பல மனிதவலு மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பான பிரச்சினைகள், அத்துடன் துறை சார் விடயங்களில் சிறந்து விளங்குவதற்காக தரங்களைப் பேணுவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடினர்.

 

 தொழிற்சங்க பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகள் மிகவும் நியாயமானவை என்றும், அந்தப் பிரச்சினைகளுக்கு முறையான மற்றும் நியாயமான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கூறினார். 

 

சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து நிபுணர்களும் நல்ல புரிதலுடன் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள் என்றும், அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதன் மூலமும், பரஸ்பர புரிதலுடன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

 

 

சுகாதார நிபுணர்களை அவர்களின் தொழில்சார் வாழ்க்கையின் தேவைகளை பூரணப்படுத்துவதன் மூலம், இந்த நாட்டு மக்களுக்கு வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்க முடியும்..

தொற்றா நோய்கள் தொடர்பான தேசிய சபை (NCD Council) கூடியது

- நாட்டில் புற்றுநோய் கட்டுப்பாட்டிற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களின் விசேட மதிப்பீட்டினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த வருடத்தில் நடாத்தப்படும் முதலாவது தொற்றா நோய் தொடர்பான தேசிய சபை (NCD Council) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (24) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

தொற்றா நோய்கள் தொடர்பான தேசிய சபை (NCD Council) கூடியது

புதிதாக நியமிக்கப்பட்ட வலுசக்தி பிரதி அமைச்சர் உத்தியோகபூர்வ கடமைகளை ஆரம்பித்தார். 

வலுசக்தி பிரதி அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட அர்கம் இல்யாஸ் நேற்று (24) தனது உத்தியோகபூர்வ கடமைகளை ஆரம்பித்தார். 

 

நாட்டின் பல்சக்தி துறையின் அவசியத் தேவை, சவால் மற்றும் இலக்குகளை அடையாளம் கண்டு அரசாங்கத்தின் வலுசக்தி கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு மற்றும் அதனை முன்னேற்றுவதற்கும் ,அதனால் நாட்டு பொது மக்களின் தேவைப்பாடுகளை திருப்தியாக பூர்த்தி செய்யும் நோக்குடன் பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் தனது கடமைகளை ஆரம்பித்திருந்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட வலுசக்தி பிரதி அமைச்சர் உத்தியோகபூர்வ கடமைகளை ஆரம்பித்தார். 

வர்த்தக அமைச்சர், National Agri Market Services Ltd இன் பணிப்பாளர் சபை இடையே கலந்துரையாடல்

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை முகாமை செய்வதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட National Agri Market Services Ltd இன் பணிப்பாளர் சபையுடன் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் நேற்று (24) வர்த்தக அமைச்சில் நடைபெற்றது.

வர்த்தக அமைச்சர், National Agri Market Services Ltd இன் பணிப்பாளர் சபை இடையே கலந்துரையாடல்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 ஒக்டோபர் 25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 ஒக்டோபர் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு