All Stories

கொழும்பு மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த அரசாங்க தொடர்மாடி வீட்டுத் தொகுதிகளை அடுத்த வருடத்தில் மீள்புனரமைக்கத் திட்டம் – தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவிப்பு

 
கொழும்பு மாவட்டத்தில் உள்ள நாற்பது வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த அரசாங்கத் தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதிகளை அடுத்த வருடம் மீள்புனரமைப்புச் செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொழும்பு மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த அரசாங்க தொடர்மாடி வீட்டுத் தொகுதிகளை அடுத்த வருடத்தில் மீள்புனரமைக்கத் திட்டம் – தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவிப்பு

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு ஏற்பாட்டுக் குழுவினர் கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு எனும் கருப்பொருளிலான செயற்றிட்டம் நாளையிலிருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவற்றுக்கான ஐனாதிபதி செயலக ஏற்பாட்டுக் குழுவினர் புகையிரதம் மூலம் நேற்றைய தினம் (12.08.2025) புதன்கிழமை மதியம் 02.30. மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு ஏற்பாட்டுக் குழுவினர் கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை

கிளீன் ஸ்ரீலங்கா ஏற்பாட்டுக் குழுவினர் யாழ் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு

இதயபூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு எனும் கருப்பொருளிலான செயற்றிட்டம் நாளையிலிருந்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அவை தொடர்பான விபரங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் (12.08.2025) பி. ப. 4.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிளீன் ஸ்ரீலங்கா ஏற்பாட்டுக் குழுவினர் யாழ் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தொடர்பான 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இங்கு, போக்குவரத்துத் துறை தொடர்பில் தனித்தனியாக, நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், கிராமிய வீதிகள் ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், துறைமுகங்கள் மற்றும் அதன் செயற்பாடுகளுக்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், அந்த ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு கேட்டறிந்தார்.

கிராமிய வீதிகளில் பஸ்களை இயக்குவது இலாபகரமானதாக இல்லாவிட்டாலும் அந்த சுமையை அரசாங்கம் ஏற்று மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தைத் திட்டமிடும்போது, நாட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முக்கியமான துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் ஆகிய துறைகளை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையிலான திட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி

அமைச்சர் பொறியியலாளர் ஜனித ருவன் கொடிதுவக்கு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தொடர்பான 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்