வட மாகாணத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கூட்டுறவு வியாபாரத்துடன் தொடர்புடைய வியாபார நிறுவனங்களை வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க ஆய்வு செய்தார்.

வட மாகாணத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கூட்டுறவு வியாபாரத்துடன் தொடர்புடைய வியாபார நிறுவனங்களை வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க ஆய்வு செய்தார்.
பதுளை போதனா மருத்துவமனையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து பார்வையிட சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் ஆய்வு விஐயம் ஒன்றை மேற்கொண்டார்.
6 மாதங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவைகள் 16% அதிகரிப்பு -போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
வடக்கின் மற்றும் கிழக்கின் சில அரசியல் கட்சிகள் மக்களை வழிகெடுத்து, அவர்களுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்தி, தமது குறுகிய அரசியல் நோக்கங்களை ஈடுசெய்வதற்காக செயற்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் காணப்படும் இராணுவ முகாம்களை மீள அமைக்கும் திட்டம் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அதன்படி முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்தையான் கட்டு சிவ நகரில் அமைந்துள்ள பன்னிரண்டாவது சிங்க ரஜிமேந்து அணி அமைந்துள்ள முகாமை மீள அமைக்கும் திட்டம் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த இராணுவ முகாம்களுக்குள் அனுமதி இன்றிய ஐந்து நபர்கள் உள்நுழைந்ததாகவும், அந்த நபர்களை திருப்பி அனுப்புவதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அந்த நபர்களை திருப்பி அனுப்பும்போது ஒருவர் மாத்திரம் முல்லைத்தீவு, முத்தையான்கட்டு வாவியில் பாய்ந்து இறந்தார்.
வாவியில் மூழ்கி மரணம் அடைந்த அந்த நபருக்கு ஏதேனும் தாக்குதல் நடந்துள்ளதாக சில சில தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாகவும், அதன்படி ஒரு படைவீரர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் மேலும் இரண்டு வீர படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது படை வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் சிவில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி சில அரசியல் குழுக்கள் இலாபம் பெறுவதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
சுற்றுலாத் துறை மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தியத்தலாவை ஆதார மருத்துவமனையை (A) நிலை மருத்துவமனையாக மேம்படுத்துவதே சுகாதார அமைச்சின் முதன்மை நோக்கமாகும்.
- சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (ஆகஸ்ட் 16) வருகைதந்த USS SANTA BARBARA (LCS) என்ற அமெரிக்க கடற்படையின் போர் கப்பலை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பார்வையிட்டார்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு நேற்று (16) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
“2025 ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலகளுக்கான மூன்றாவது தவணை பாடசாலை நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாவது பாடசாலைத் தவணை திங்கட்கிழமை, 25.08.2025 ஆரம்பமாகவுள்ளது.
உலகின் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் முன்னேறி அதன் முடிவுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கும் Huawei புலமைப்பரிசில்களை வென்ற இலங்கை மாணவர்களுக்கு இயலும் என்றும் இவ்வாறான திட்டங்கள் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புப் பாலம் தொடர்பாக மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுரா செனவிரத்ன கூறினார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]