All Stories

உமா ஓயா திட்டத்தை செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்க அவசர நடவடிக்கை

 
பல சிக்கல்கள் காரணமாக நீண்டகாலமாக தாமதமாகிய உமா ஓயா திட்டத்தின் மீதமாகவுள்ள பணிகளை, இந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்தள்ளது.
உமா ஓயா திட்டத்தை செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்க அவசர நடவடிக்கை

ஹொங்கொங் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் (ICAC) பிரதிநிதிகள் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தை சந்தித்தனர்

ஹொங்கொங் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் (ICAC) பிரதிநிதிகள் பணியாட்தொகுதியின் பிரதானியும் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவை சந்தித்தனர்.
ஹொங்கொங் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் (ICAC) பிரதிநிதிகள் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தை சந்தித்தனர்

பிள்ளைகளின் பிரபோதம் மிக்க மனம் அவர்களை புத்திசாலிகளாக்கி, அதன் மூலம் மோசடி மற்றும் ஊழலற்ற சமூகத்திற்கான தனிநபர்களை உருவாக்குகிறது - கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன

பிள்ளைகளின் பிரபோதம் மிக்க மனம் அவர்களை புத்திசாலிகளாக்கி, அதன் மூலம் மோசடி மற்றும் ஊழலற்ற சமூகத்திற்கான தனிநபர்களை உருவாக்குகிறது என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். அத்துடன், எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள், பிள்ளைகளை தங்கள் பிள்ளைப் பருவத்தை அதே வழியில் கழிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

பிள்ளைகளின் பிரபோதம் மிக்க மனம் அவர்களை புத்திசாலிகளாக்கி, அதன் மூலம் மோசடி மற்றும் ஊழலற்ற சமூகத்திற்கான தனிநபர்களை உருவாக்குகிறது - கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு நேற்று (16) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

AI for Transforming Public Service’ என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பத்து அமைச்சுக்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஆரம்ப பிரவேசமாக, அரச அதிகாரிகளை அறிவூட்டுதல் மற்றும் தயார்படுத்துதல் மற்றும் அரச சேவைக்குள் செயற்கை நுண்ணறிவு குறித்த சாதகமான அணுகுமுறையை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும், அரச சேவை அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் அரச சேவையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இந்த செயலமர்வில் முக்கிய உரை நிகழ்த்தினார். இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபை உறுப்பினர்களான ஹர்ஷ புரசிங்க, ஸமிச அபேசிங்க செயலமர்வில் வளவாளர்களாக பங்கேற்றனர்.
தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிச்ச, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர்.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இந்திய தூதகரத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகஸ்ட் 19 பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்