All Stories

2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு உர நிதி மானியத்தை வழங்கல்

2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கும், வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு உர நிதி மானியத்தை வழங்கல்

அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தைத் திருத்தம் செய்தல்

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள்  திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தைத் திருத்தம் செய்தல்

உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதார ஆய்வு அறிக்கை - 2024 வெளியீடு

உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதார ஆய்வு - 2024 (Global School-Based Student Health Survey – 2024) இன் இலங்கை அறிக்கை அண்மையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி தலைமையில் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் குடும்ப சுகாதாரப் பணியக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது.

இங்கு, உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதார ஆய்வு அறிக்கையின் முதல் பிரதி சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி உள்ளிட்ட அழைக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன், ஆய்வு அறிக்கையின் தரவுகள் குறித்து அறிவார்ந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்த ஆய்வு அறிக்கை உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து வெளியிட்ட ஆய்வு அறிக்கையாகும்.

இந்த ஆய்வின் மூலம் போஷாக்கு, உணவு, நடத்தை மற்றும் உடல் செயற்பாடுகள், மன ஆரோக்கியம், பல் ஆரோக்கியம், போதைப்பொருள் பயன்பாடு, தற்கொலை எண்ணங்கள், திட்டங்கள் மற்றும் முயற்சிகள், வன்முறை, காயங்கள், பாலியல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் பதின்ம வயது சுகாதார கண்காணிப்பு உள்ளடக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி, இந்தத் தரவுகள் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகளிலும் ஏற்படுத்த வேண்டிய சாதகமான மாற்றங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றார்.

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக செய்யப்படும் எந்தவொரு முதலீடும் நாட்டின் எதிர்காலத்திற்காக செய்யப்படுவதாகும் என்றும், இந்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முக்கியமான இரண்டு துறைகளிலும் மேற்கொள்ளப்படும் கொள்கை மற்றும் மூலோபாய மாற்றங்கள் அனைத்தும் நாட்டின் எதிர்காலத்தை வளப்படுத்தும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பாடசாலை செல்லும் பதின்ம வயது மாணவர்களிடையே சுகாதாரம் தொடர்பான நடத்தைகளை மதிப்பிடுதல், பல சுகாதாரத் துறைகள் ஊடாக ஆபத்து மற்றும் பாதுகாப்பு காரணிகளை அடையாளம் காணுதல், பதின்ம வயது ஆரோக்கியத்திற்கான கொள்கை உருவாக்கம் மற்றும் நிகழ்ச்சித்திட்ட மேம்பாட்டிற்கு உதவுதல் ஆகிய மூன்று முக்கிய நோக்கங்களை மையமாகக் கொண்டு 2024 ஆம் ஆண்டில் 40 அரச பாடசாலைகளில் 8-12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 3,843 மாணவர்களை உள்ளடக்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 17.4% பேர் ஆரோக்கியமற்ற பானங்களை உட்கொள்வதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்றும் அறிக்கை காட்டுகிறது. மேலும், மாணவர்களில் 28% பேர் தினமும் இனிப்புப் பானங்களை உட்கொள்வதாகவும், 28.5% பேர் தினமும் உப்பு நிறைந்த சிற்றுண்டிகளை உட்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தவிர, 29.3% பேர் அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வதாகவும், 40.9% பேர் தினமும் அதிக இனிப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களில் 70.4% பேர் ஆய்வுக்கு முந்தைய வாரத்தில் ஒரு முறையாவது துரித உணவை உட்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களின் குறைந்த எடை சதவீதம் 21.4% ஆகவும், அதிக எடை சதவீதம் 12.1% ஆகவும் உள்ளதாக ஆய்வுத் தரவுகள் காட்டுகின்றன. மேலும், பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில், ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகளை புகைக்க முயற்சித்த அல்லது பரிசோதித்த மாணவர்களின் சதவீதம் 12.8% ஆக உள்ளதாகவும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
==============

உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதார ஆய்வு அறிக்கை - 2024 வெளியீடு

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வதும் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்திக் கொள்வதும்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆப் பிரசங்கத்தை பிற்பகல் 1.00 மணிக்கு முன்னதாக சுருக்கிக் கொள்வதுடன் பரீட்சை நிலையங்களுக்கு அண்மையில் இருக்கும் பள்ளிவாசல்களில் பரீட்சை நடைபெறும் நேரங்களில் குறிப்பாக ளுஹர், அஸர் நேரங்களில் வெளி ஒலிபெருக்கிப் பாவனைகளை நிறுத்தி உள்ளக ஒலிபெருக்கியை மட்டும் பாவித்து மாணவர்கள் பரீட்சைகளை சிரமமின்றி எழுதுவதற்கு உதவுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வதும் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்திக் கொள்வதும்

நீர் விநியோக நிறுத்தம் - கட்டான வடக்கு

கட்டான நீர் வழங்கல் திட்டத்தின் கட்டான வடக்கு பிரதேசத்தின் நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (2025.03.19) காலை 8.00 மணி முதல் அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணி நேரம் கட்டான வடக்கு பிரதேசத்தின் பின்வரும் பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் -

பம்புகுலிய, முருதான, கட்டான வடக்கு, கட்டான மேற்கு, கட்டான கிழக்கு, உடங்காவ, மானவேரியா, தோப்புவ, மேற்கு களுவாரிப்பு, மேல் கதவல, கீழ் கதவல, வெலிஹேன வடக்கு, வெலிஹேன தெற்கு, ஆடிகண்டிய, எத்கால, எத்கால தெற்கு, மஹஎத்கால மற்றும் கிழக்கு களுவாரிப்புவ.

நீர் விநியோக நிறுத்தம் - கட்டான வடக்கு

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக நாடு தழுவிய புதிய திட்டம்

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக நாடு தழுவிய புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பண்ணிலகே தெரிவித்தார்.

கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக நாடு தழுவிய புதிய திட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் ஆளுநர் பார்வையிட்டார்

கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாற்றில் முன்னெடுக்கப்படும் ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும், புழுதியாற்றில் கைவிடப்பட்டுள்ள ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் ஆளுநர் பார்வையிட்டார்

ஜனாதிபதிக்கும் சுற்றுலா அமைச்சுஅதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

"நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் தரத்தை மேம்படுத்துக" - ஜனாதிபதி

ஜனாதிபதிக்கும் சுற்றுலா அமைச்சுஅதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை 

இன்றைய வானிலை அறிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்தத்தினால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம் 

இம்முறை க. பொ. த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்பாராத காலநிலை உருவாகக்கூடிய அனர்த்தத் தடைகளை தவிர்ப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் இணைந்து விசேட  வேலைத்திட்டம் ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டது.

க. பொ. த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்தத்தினால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டம் 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலிருந்து மேலும் சிலருக்கு ஜப்பான் வேலை வாய்ப்புகள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலிருந்து மேலும் சிலருக்கு ஜப்பான் வேலை வாய்ப்புகள் தகுதியுள்ள இளைஞர் யுவதிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலிருந்து மேலும் சிலருக்கு ஜப்பான் வேலை வாய்ப்புகள்

எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சுற்றுலாத் துறையை மையப்படுத்தி எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் சில வருடங்களில் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]