All Stories

'தித்வா' புயலால் சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப கடற்படை “நென திரி மெஹெயும” க்கு பங்களிப்பு செய்கிறது

'தித்வா' புயலால் சேதமடைந்த பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீள கட்டியெழுப்புவதற்காக, ஊவா மாகாண கல்வி அமைச்சினால் 2025 டிசம்பர் 20 முதல் 27 வரை ஒரு வாரத்திற்கு செயல்படுத்தப்பட்ட “நென திரி மெஹெயும” க்கு பங்களிக்கும் இலங்கை கடற்படை, தற்போது பதுளை மற்றும் மஹியங்கனை கல்வி வலயங்களில் சேதமடைந்த பாடசாலைகளில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

'தித்வா' புயலால் சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்ப கடற்படை “நென திரி மெஹெயும” க்கு பங்களிப்பு செய்கிறது

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் தலைமன்னார் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுநேற்று

இலங்கை கடற்படையினர் நேற்று (2025 டிசம்பர் 23) அதிகாலை தலைமன்னார் வடக்கு கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பன்னிரண்டு (12) இந்திய மீனவர்களை கைப்பற்றினர்.

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் தலைமன்னார் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுநேற்று

யுனிசெஃப் நிறுவனம் சுகாதார அமைச்சகத்திற்கு BP - 5 உப ஊட்டச்சத்து உணவை நன்கொடையாக வழங்கியது

இயற்கை அனர்த்தம் காரணமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாக்க, யுனிசெஃப் நிறுவனம் நாட்டிற்கு உப ஊட்டச்சத்து உணவை தக்க தருணத்தில் நன்கொடையாக வழங்குவது மிக சிறந்த ஒன்றாகும் என தெரிவித்தார்.

யுனிசெஃப் நிறுவனம் சுகாதார அமைச்சகத்திற்கு BP - 5 உப ஊட்டச்சத்து உணவை நன்கொடையாக வழங்கியது

சுரக்ஷா மாணவர் காப்புறுதியை 2025/26 ஆண்டில் அமுல்படுத்தல்

பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்ற மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வசதியளிக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படுத்தியுள்ள 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் கோப்பரேசன் ஜெனரல் லிமிட்டட் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்மூலம், அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் விசேட உதவிப் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற 40 இலட்சம் மாணவர்களுக்கு சுகாதாரக் காப்புறுதி, விபத்துக் காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி வகுதிகளின் கீழ் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுரக்ஷா மாணவர் காப்புறுதியை 2025/26 ஆண்டில் அமுல்படுத்தல்

சிவனொளிபாதமலை பிரதேசத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையைக் குறைத்தல்

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 06 மாதகாலம் நீடிப்பதுடன், குறித்த காலப்பகுதியில் அங்கு வருகை தருகின்ற யாத்திரிகர்கள் மற்றும் ஏனைய நபர்களால் கழிவகற்றப்படும் உக்கலடையும் மற்றும் உக்கலடையாத கழிவுப் பொருட்கள் அப்பிரதேசத்தில் அதிகளவில் சேர்கின்றன. சிவனொளிபாதமலை வனப்பிரதேசம் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தால் உள்வாங்;கப்பட்டுள்ள அதிகூருணர்வு வலயமாக இருப்பதுடன், குறித்த பிரதேசத்தில் கழிவு முகாமைத்துவம் செய்வது காலத்தின் தேவையாகவுள்ளது. அதற்கமைய, சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் குறித்த பிரதேசத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக 2025 ஆம் ஆண்டு தொடக்கம் சுற்றாடல் அமைச்சு கீழ்க்காணும் படிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றமையை சுற்றாடல் அமைச்சர் அவர்கள் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியதுடன், அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.

சிவனொளிபாதமலை பிரதேசத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையைக் குறைத்தல்

‘Rebuilding Sri Lanka’  திட்டத்திற்கு சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள சீனா தயாராக உள்ளது

 

- சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும்,  Xizang  தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான Wang Junzheng தெரிவிப்பு

 

அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் எனவும்  ‘Rebuilding Sri Lanka’  திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும்  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான Wang Junzheng தெரிவித்தார்.

 

சீனத் தூதுக் குழுவுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள Wang Junzheng, இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது  மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

 

அனர்த்த நிலைமையில் இலங்கைக்கு சீனா வழங்கிய அவசர மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இதன் போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில்  இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவையும் அவர்  பாராட்டினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

 

மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் தொடங்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’   திட்டம் குறித்து சீனக் குழுவிற்கு ஜனாதிபதி         தெளிவுபடுத்தினார்.

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு மற்றும் நட்புறவை  மேலும் வலுப்படுத்தி, சீனா இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று தெரிவித்த  Wang Junzheng, இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், புதிய திட்டங்களைத் ஆரம்பிக்கவும் சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று குறிப்பிட்டார்.

 

 

 

 

 

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புத் திட்டம் போன்ற அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களுக்கு சீனா ஆதரவளிக்கும் என்றும், குறிப்பாக கிராமிய வறுமையை ஒழிப்பதில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தேவையான உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் சர்வதேச திணைக்கள தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பணிப்பாளர் நாயகம்  Peng Xiubin பிராந்திய வெளியுறவு அலுவலக  பணிப்பாளர் நாயகம் Bao Ting,  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பிரதிப் பணிப்பாளர் Wang Siqi மற்றும் இலங்கை அரசாங்கம் சார்பில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி  அமைச்சருமான கலாநிதிஅனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-12-23

 

‘Rebuilding Sri Lanka’  திட்டத்திற்கு சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள சீனா தயாராக உள்ளது