நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் மற்றும் நிதி பிரதி அமைச்சர் அணில் ஜயந்த, கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, உட்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது அதிகாரிகள், ஜனாதிபதியிடம் விளக்கமளித்ததுடன், வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார மற்றும் நிதி அமைச்சு மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்அமைச்சின் அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இஸ்ரேலில் கட்டுமானத் துறையின் கீழ் உள்ள Renovation, General work, Ceramic Tiling, Plastering work ஆகியவற்றில் பணிபுரிய 148 இலங்கையர்கள் கடந்த 4 ஆம் திகதி இஸ்ரேல் சென்றுள்ளனர்.
திட்டமிட்ட காலத்திற்குள் வேலைத்திட்டங்களை நிறைவுசெய்யவும்- ஜனாதிபதி
நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பில் ஒரு சிறந்த மாற்றத்தைக் ஏற்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு (Cluster Health Information System) (CHIS) நேற்று (05) தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
தபால் திணைக்களத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் நிலையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் ராஜமாணிக்கம் முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தபால் திணைக்களத்தின் வாகனங்கள் போதிய அளவு இன்மை, ஊழியர்களுக்கு பிரச்சினைகள் காணப்படுவதாகவும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சில உப தபால் அலுவலகங்களில் அந்த அளவு இலாபம் கிடைப்பதில்லை என்றும், எனினும் உலகளாவிய ரீதியில் அமைந்துள்ளதற்கு அமைப்பாக அவ்வாறான பிரதேசங்களில் உபதபாலகங்களை நடாத்திச் செல்வது முக்கியமானது என்பதனால் அத்தா பாலகங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக அமைச்சர் விபரித்தார்.
அவ்வாறான தபாலகங்கள் தொடர்பாக தற்போது தபால் திணைக்களம் மீளய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
600 மில்லியன் ரூபாய் நிதி, 12 தபாலகங்கள், 02 உப தபாலகங்கள் மற்றும் மேலும் சில தபால் நிலையங்கள் நவீனமயப்படுத்தப்படுவதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவு
படுத்தினார்.
உலக சுற்றாடல் தினமான (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்கான கல் ஓயா நீர்ப்பாசன புனரமைப்புத் திட்டமான “வாரி மகிம - அபே உறுமய”வின் ஆரம்ப விழா நேற்று (05) விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் கல் ஓயா இவுரு நைனகாடுவில் இடம்பெற்றது.
2025 ஜூன் மாதம் 06 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.
2025-06-05
பாடசாலை வளாகத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் நிவாரணி க்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]