
2025 ஆண்டு மே மாதம் 06 ஆம் திகதி நடாத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் 2025 மே மாதம் 05,06 ஆகிய இரு தினங்களும் விடுமுறை வழங்குவதுடன்,
2025 மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் காரணமாக நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று (05) மற்றும் நாளை (06) இரண்டு நாட்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதுடன், 2025.05.07 ஆம் திகதி பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை / சமூக ஊடக வலைத்தளங்களின் ஊடாக விடுவிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு எதிராக நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (04) தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பௌத்த விகாரைகளில் ஒன்றான பாய் டின் (Bai Dinh) விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
2025 மே மாதம் 04 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம், மேலதிக சட்ட நடவடிகளுக்காக (02) இலங்கை இராணுவத் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]