All Stories

80வது ரஷ்ய வெற்றி தின நினைவு நிகழ்ச்சியில் பாதுகாப்பு செயலாளர் கலந்துக்கொண்டார்

ரஷ்யாவின் 80வது வெற்றி தின நினைவு விழா திங்கள்கிழமை (மே 5) கொழும்பில் உள்ள ரஷ்ய இல்லத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) போரின் போது மேட்கொள்ளப்பட்ட தியாகங்களை கௌரவிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார்.

80வது ரஷ்ய வெற்றி தின நினைவு நிகழ்ச்சியில் பாதுகாப்பு செயலாளர் கலந்துக்கொண்டார்

உலக வங்கியின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உலக வங்கியின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 56.6 வீதம் வாக்களிப்பு

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (06.05.2025) தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்கள் ஊடாகவும் மற்றும் அஞ்சல் மூல வாக்களிப்பு மூலமாகவும் 56.6℅ வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 56.6 வீதம் வாக்களிப்பு

ஜனாதிபதி வாக்களித்தார்



2025 உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மருதானை பஞ்சிகாவத்தை அபேயசிங்கராம சயிகோஜி முன்பள்ளியில் இன்று (06) பிற்பகல் தமது வாக்கை அளித்தார்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க; ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதியான ஜனநாயக சுதந்திரம் எதிர்காலத்தில் இடம்பெறும் சகல தேர்தல்களிலும் மக்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

தேர்தல் வரலாற்றில் அமைதியான தேர்தல் பிரச்சாரம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மக்கள் அனுபவிப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி நாட்டில் அரசியல் கலாசாரம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், மற்றும் 336 உள்ளூராட்சி சபைகளுக்கு 8000 இற்கும் அதிகமான பிரதிநிதிகளை இம்முறை உள்ளூர் அதிகார சபை தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி வாக்களித்தார்