🔸 பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு மூன்று உறுப்பினர்கள்

🔸 பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு மூன்று உறுப்பினர்கள்
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை மே மாதம் 19ஆம் திகதி ‘பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு’ முன்னிலையில் ஆஜராகுமாறு குறித்த குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
025 மே 4 முதல் 6 வரை, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் வியட்நாம் சோசலிசக் குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் வியட்நாம் சோசலிசக் குடியரசும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசும் வெளியிட்ட கூட்டு அறிக்கை
போரின் தீப்பிழம்புகளிலிருந்து நீங்கி, அமைதி நிறைந்த உலகில், அனைத்து நாடுகள் மற்றும் மக்களிடையே அமைதி, அபிவிருத்தி மற்றும் கௌரவத்தை உருவாக்க, பௌத்த தத்துவத்திலிருந்து உத்வேகம் பெறுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மே மாதம் 8 ஆம் திகதி கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிற்கான பிராந்திய கூட்டு பல் அனர்த்த முன் எச்சரிக்கை முறைமையின் (RIMES) நான்காவது அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பிற்பகல் 1:00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்றது.
குறித்த நிகழ்விற்காக விகாரைகளுக்கு வருகைத்தரும் பக்தர்களுக்கான வசதிகளை செய்து தருமாறு சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாராதிபதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
குறிப்பாக கதிர்காமத்திலிருந்து சிதுல்பவ்வ வரையிலான வீதியை முழுமையாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிதுபவ்வ விகாராதிபதி லேல்வல சமித தேரர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளில் நடைபெறவிருக்கும் பொசொன் தான நிகழ்ச்சித் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
திஸ்ஸமஹாராம விகாராதிபதி கலாநிதி தேவாலகம தம்மசேன தேரர், ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் இந்திரஜித் சில்வா உள்ளிட்டவர்களும் அரச நிறுவனங்களின் பிரதானிகள் சிலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அம்மாகாணங்களின் கிராமிய வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் போன்றவற்றிற்காக விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அச்செயற்பாடுகள் பல்வேறு அமைச்சுகளுக்கு ஊடாக இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
முப்பது ஆண்டுகள் யுத்தத்தை எதிர்கொண்ட அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விபரித்தார்
யாழ்ப்பாணம், எழுவைதீவிற்கு அப்பால் வடக்கு கடலில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மூன்று (03) சந்தேக நபர்களும், சுமார் முன்னூற்று ஒரு (301) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகும் 2025 மே 07 கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
சமந்த ரணசிங்க அவர்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் முன்னிலையில் இன்றையதினம் (08) பத்தாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்திய கேகாலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த கோசல நுவான் ஜயரத்ன அவர்களின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2025 மே மாதம் 08 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]