All Stories

வடக்கு கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது ஒரு தேசியத் தேவை - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தேசிய தேவையாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது ஒரு தேசியத் தேவை - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

ஜனாதிபதியின் வியட்நாம் அரச விஜயம் 04 ஆம் திகதி ஆரம்பம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி மே 03 ஆம் திகதி இரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தின் 19 வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய் 

மாத்தறை மாவட்டத்தின் 19 வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். 

உலக வங்கி நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இணைப்பு மற்றும் அபிவிருத்தி உள்ளடங்களான ( Inclusive Connectivity and Development) திட்டத்தின் ஊடாக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பான பெறுகை செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மாத்தறை மாவட்டத்தின் 19 வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய் 

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன 2025.04.30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிப்பு

தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லுயுடீஆ ஜகம்பத் அவர்களினால் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் நேற்றை தினம் (01.05.2025) மு. ப 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிப்பு

வாக்களிப்பு செயற்பாடுகளின் போது இயலாமைக்குட்பட்ட வாக்காளர்களுக்கு அவசியமான வசதிகள் வழங்குதல்

உள்ளூர் அதிகார சபைகளுக்கான வாக்களிப்பு செயற்பாடுகளின் போது எந்தவித அசௌகரியங்களுமின்றி இயலாமைக்குட்பட்ட வாக்காளர்களக்கு அவசியமாக வசதிகள் வழங்குவதை உறுதிசெய்துகொள்ளும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்களிப்பு செயற்பாடுகளின் போது இயலாமைக்குட்பட்ட வாக்காளர்களுக்கு அவசியமான வசதிகள் வழங்குதல்