All Stories

இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு உரையாடல் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துகிறது 

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், 5வது வருடாந்த இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு உரையாடல் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் தொடங்கியது.

இலங்கைக் குழுவிற்கு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமை தாங்குகிறார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஜயந்த எதிரிசிங்க ஆகியோரும்  இணைந்து கொண்டார்.

அதேபோன்று, பாகிஸ்தான் குழுவிற்கு பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முஹமது அலி (ஓய்வு) தலைமை தாங்குகிறார்.

நடைபெற்ற வரும் பாதுகாப்பு உரையாடலுடன் இணைந்ததாக, எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) இன்று (ஏப்ரல் 29) பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா முஹம்மது ஆசிஃப் உடன்  சந்திப்பு நடத்தினார்.

இந்த உயர்மட்ட ஈடுபாடுகள் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்த பரஸ்பர புரிதலை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பில் வேரூன்றிய நீண்டகால உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. தெற்காசிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலும் அமைதியை மேம்படுத்துவதிலும் கூட்டாண்மைகளின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இந்த உரையாடல் பிரதிபலிக்கிறது.

புதன்கிழமை (ஏப்ரல் 30) முடிவடையும் மூன்று நாள் உரையாடல், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் பரந்த பிராந்திய பாதுகாப்பு நோக்கங்களுக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை-பாகிஸ்தான் இருதரப்பு பாதுகாப்பு உரையாடல் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துகிறது 

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைப்பு

 

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட "படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி அலுவலகத்தினால் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு இதுவரை வந்த மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கிழக்கு முனையத்தை வந்தடைந்தது. 

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் என்று அழைக்கப்படும் MSC MARIELLA, நேற்று (28) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) வந்தடைந்தது. 

கொழும்பு துறைமுகத்திற்கு இதுவரை வந்த மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கிழக்கு முனையத்தை வந்தடைந்தது. 

“அசிதிசி ஊடக புலமைப் பரிசில் திட்டம் -2025” - விண்ணப்பம் கோரல்

இலங்கை ஊடகவியலாளர்களின் தொழிற்தகைமையை முன்னேற்றும் நோக்கில் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் அசிதிசி ஊடகப் புலமைப் பரிசில் திட்டம் இம்முறை சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி “அசிதிசி ஊடக புலமைப் பரிசில் திட்டம் - 2025” திட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 2025 மே மாதம் 23ஆம் திகதி ஆகும்.

“அசிதிசி ஊடக புலமைப் பரிசில் திட்டம் -2025” - விண்ணப்பம் கோரல்

2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள்  மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார்.

2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2569 ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் வெசாக் மகோற்சவம்

2569 (2025) ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் வெசாக் மகோற்சவம் நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நுவரெலியா சர்வதேச பௌத்த நிலைய விகாரையில் நடாத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

2569 ஆவது ஸ்ரீ பௌத்த வருடத்தின் வெசாக் மகோற்சவம்