All Stories

"கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேசியத் திட்டம்

 

"கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேசிய அளவிலான திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நாட்டில் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வீதிப் பயன்பாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதும் காலத்தின் தேவை என்பதை இனங்கண்டு, கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தேசியத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

நாட்டில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் சமூகத்தை மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கத்துடன், கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் செயல்படுத்தப்படுவதுடன் அங்கு, ஒழுக்கமான சமூகத்தையும் பிரஜைகளையும் கட்டியெழுப்புவதில் முதன்மை கவனம் செலுத்தப்படுகிறது.

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு,  வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் சமூக மற்றும் நெறிமுறைகள் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் (அவசர சேவைகள்) வைத்தியர் இந்திக ஜாகொட, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிவகுமார் மற்றும் பேராசிரியர் எச்.ஆர். பசிந்து, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (மோட்டார் வாகனங்கள்) மற்றும் குறித்த அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-04-30

"கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேசியத் திட்டம்

ஜனாதிபதியின் மே தின செய்தி

1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்தது.

ஜனாதிபதியின் மே தின செய்தி

"கிளீன் ஸ்ரீ லங்கா" வழிகாட்டலில் ஆயிரம் ஏக்கர் வன வளர்ப்பு..

 

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் தனியார் துறையுடன் இணைந்து ஆயிரம் ஏக்கரில் வள வளர்ப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

"கிளீன் ஸ்ரீ லங்கா" வழிகாட்டலில் ஆயிரம் ஏக்கர் வன வளர்ப்பு..

ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இடையே சந்திப்பு 

நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்துடன் இன்று (30) கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இடையே சந்திப்பு 

பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் பொருளாதார விவகார அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதியை சந்தித்தார்

தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு கலந்துரையாடலின் ஒரு அங்கமாக, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தா (ஓய்வு) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை சந்தித்தார்.

பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் பொருளாதார விவகார அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதியை சந்தித்தார்