16 வது தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரை பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள போர் வீரர் நினைவுச் சின்ன வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

16 வது தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரை பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள போர் வீரர் நினைவுச் சின்ன வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் , வெளியீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச் . எஸ். கே. ஜே. பண்டார நேற்று (17) மற்றும் இன்று (18) ஆகிய இரு தினங்களில் சந்தித்தார்.
உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) காலை சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார்.
மருத்துவ சேவைகளில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (MLT) மற்றும் பிசியோதெரபிஸ்ட் பதவிக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சமீபத்தில் நடைபெற்ற போட்டித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான நேர்காணல்கள் நேற்று (17) நாள் முழுவதும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றன.
ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை தேவையுள்ள நோயாளிகளுக்காக மேலும் விரிவுப்படுத்த அர்ப்பணிப்போம்
- ஜனாதிபதியின் செயலாளர்
மேல் மாகாண பிரதேச செயலகங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு நேற்று (17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிரதேச மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கு அமைவாக, மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் மேற்படி விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி நிதிய செயல்பாடுகள் குறித்த நடைமுறை அறிவை மேலும் வழங்குவதற்காக இந்த சிறப்பு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில், அரச ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறந்த தொடர்பாடல்களை எவ்வாறு கட்டியெழுப்புவது மற்றும் அதனை பேணுவது என்பது குறித்து ஜனாதிபதி ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார விளக்கமளித்தார்.
மேலும், கணினி கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, மருத்துவ உதவி விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதிலிருந்து அனுமதிப்பது வரையிலான செயல்முறை குறித்த விளக்கக்காட்சி, ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் பொறுப்பான ஜனாதிபதி நிதிய, அதிகாரிகள் உட்பட பணிக்குழுவினரால் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவின் செயல்பாடுகளையும் கணினி கட்டமைப்புடன் சரிபார்த்தல், அனுமதிக்கு பின்னர் மருத்துவ உதவிகளை வழங்குதல் செயல்முறை மற்றும் கணினி கட்டமைப்பில் பணிபுரியும் போது விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நடைமுறை மற்றும் ஒழுங்குமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
மிகவும் தேவையுள்ளவர்களுக்கு சேவைகளை வழங்குவதே ஜனாதிபதி நிதியத்தின் முக்கிய நோக்கம் மற்றும் எண்ணக்கருவாகும் என்றும், தற்போது பிரதேச செயலக மட்டத்தில் நிதியத்தின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அதிகமான மக்கள் சேவைகளை எளிதாகப் பெற முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, சுட்டிக்காட்டினார்.
இந்த சேவையின் மதிப்பை அனைத்து அரசாங்க அதிகாரிகளும் புரிந்துகொண்டுள்ளனர் என நம்புவதாகவும், மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரினதும் ஆதரவு தேவை என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.
ஜனாதிபதி நிதியிலிருந்து ஆண்டுதோறும் பெறப்படும் பணம், தேவை உள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும், தேவை உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் மேம்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நோயாளிகளால் பிரதேச செயலகங்கள் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் கணினி கட்டமைப்பில் உள்ளீடு செய்யப்பட்டிருப்பதாகவும். மேலும், இந்த விண்ணப்பங்களில் 40% மேல் மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே சுட்டிக்காட்டினார்.
2025.02.07 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை பிரதேச செயலகங்களுக்கு விரிவு படுத்தும் செயல்பாட்டின் கீழ் தற்போது பெறப்படும் விண்ணப்பங்களில் 80%, பிரதேச செயலகங்கள் மூலமாகவே பெறப்படுவதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தப் செயலமர்வில் பங்கேற்ற பிரதேச செயலகங்களின், விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்களான பீ.எச். கொலம்பகே, பீ.ஆர். பிரசாத் பெரேரா, ஜனாதிபதி நிதியத்தின் தலைமை கணக்காளர் டீ.ஏ.எம். விக்ரமரத்ன, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் உஷானி ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய பணிக்குழுவினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
2025 மே மாதம் 18 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யும்
தீவு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருகிறது..
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் முடி கூட்டங்களால் நிறைந்து காணப்படும்..
மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது பயணிக்கும் மணித்தியாலத்திற்கு (30-40) கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழை காரணமாக ஏற்படும் என தற்காலிக காற்றினால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (மே 16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தீர்வுகள் வழங்கப்பட்ட போதிலும், பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் (Station Masters) மேற்கொண்ட நியாயமற்ற வேலைநிறுத்தம் தொடர்பாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினர், 2025 மே மாதம் 02 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரையில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 310 கிலோகிராம் 44 கிராம் பீடி இலைகள் மற்றும் சுமார் 12,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களை கைப்பற்றினர்.
புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடியா தூதுவர் ராத் மானி அவர்கள், மே மாதம் 16 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.
டாக்காவில் உள்ள இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட் அவர்கள், மே மாதம்16 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]