All Stories

தாதியர் சேவை வரலாற்றில் முதல் தடவையாக 3,147 பேருக்கு இன்று (24) அலரி மாளிகையில் வைத்து நியமனங்கள் 

தாதியர் சேவை வரலாற்றில் முதல் தடவையாக 3,147 பேருக்கு இன்று (24) அலரி மாளிகையில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன 

 
நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் பாரிய எண்ணிக்கையானவர்களுக்கு ஒரே தடவையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.  
 
இதனை முன்னிட்டு தாதியர் சேவையின் 79 விசேட தர தாதிய உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன. 
 
 
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பங்குவற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தாதியர் சேவை வரலாற்றில் முதல் தடவையாக 3,147 பேருக்கு இன்று (24) அலரி மாளிகையில் வைத்து நியமனங்கள் 

வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் கீழ், 40,000 ஏக்கர் தென்னைகளை பயிரிடுவதற்கு எதிர்பார்ப்பு - தென்னை அபிவிருத்தி சபை

 

நாட்டின் தேங்காய் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்ளூரில் தேங்காய் உற்பத்தி செய்யும் நோக்கில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் கீழ், 2025-2026 ஆண்டுகளில் 40,000 ஏக்கர் தென்னைகளை பயிரிட எதிர்பார்க்கப்படுவதாக தென்னை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் கீழ், 40,000 ஏக்கர் தென்னைகளை பயிரிடுவதற்கு எதிர்பார்ப்பு - தென்னை அபிவிருத்தி சபை

நாட்டில் சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பாக ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பு பாராட்டு......

 

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழிலாளர்களை முன்னேற்றுவதற்காக கைத்தொழில் அமைச்சு மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி இந்திரா பிரதான சிங்கவிந்த ( Indra Pradhana Singawinta) தெரிவித்தார். 

நாட்டில் சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பாக ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பு பாராட்டு......

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவு

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.

 சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவு

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை தினம் அறிவிப்பு

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை தினம் திருத்தப்பட்ட மையினால் 2025 மே 25 மற்றும் 26 ஆம் திகதி இரண்டு நாட்களும் பாடசாலை நடைபெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது.

 

முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) 2025 ஜூன் 07 ஆம் திகதி சனிக்கிழமை வருவதனால், 2025.06.06 மற்றும் 2025.06.09 திங்கட்கிழமை சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்தப் பாடசாலை விடுமுறை தினத்திற்காக 2025.05.26 திங்கட்கிழமை மற்றும 2025.05.27 செவ்வாய்க்கிழமை தினங்களில் பாடசாலை நடைபெற வேண்டும் என்பதுடன், அதன்படி, 2025 பாடசாலை வருடத்தின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 2025.05.26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

IMG 20250524 WA0014

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை தினம் அறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 மே மாதம் 24 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 மே 24 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் தீவின் சில இடங்களில் மழை சிறிய அளவில் பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.

மத்திய மலை நாட்டின் சரிவுப் பிரதேசங்களில் மற்றும் வடக்கு, வடமத்தி, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (30-40) கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழை பெய்யுடன் ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்றுக் காரணமாக மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

Weather today

இன்றைய வானிலை முன்னறிவிப்பு