All Stories

ஷாங்காய் நகராட்சி மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் சபாநாயகரைச் சந்தித்தனர்

சீனாவின் ஷாங்காய் நகராட்சி மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் கௌரவ ஜாங் குவான் (Zhang Quan) தலைமையிலான தூதுக் குழுவினர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்று (21) பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

ஷாங்காய் நகராட்சி மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் சபாநாயகரைச் சந்தித்தனர்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

இலங்கைக்குள் தற்போது முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கியுள்ளது - ஜனாதிபதி எரிசக்தி, சுற்றுலா, முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உப பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீட் அல் நஹியான் தலைமையிலான குழுவினர், இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு எமீரகத்தின் உப பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீட் அல் நஹியான் தெரிவித்தார்.

 

இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி,மேம்படுத்துவதுவதையும், இரு நாடுகளும் பொருளாதார நன்மைகளை ஈட்டிக்கொள்ள வேண்டும் என்பதையும் நோக்காக் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தின் உப பிரதமரும் அவரது குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

 

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதன் மக்கள் சார்பாக இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து கூறிய உப பிரதமர், புதிய அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் கூறினார். இலங்கையின் மறுமலர்ச்சி வேலைத்திட்டத்திற்கான எனது முயற்சிகள், அர்ப்பணிப்பு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனான முன்னேற்றகரமான அணுகுமுறையையும் உப பிரதமர் பாராட்டினார்.

 

இங்கு இலங்கையில் முதலீட்டிற்கு உகந்த சூழல் உருவாகியிருப்பதாகக் கூறினார். கடந்த காலங்களை போன்று முதலீடுகளை வலுவிழக்கச் செய்யும் நிலைமை மீண்டும் ஏற்பட இடமளிக்கப்படாது என்றும், முதலீடுகளைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

 

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதிநிதிகள் குழுவுக்கு விளக்கமளித்ததுடன், துறைமுக இறங்குதுறை அபிவிருத்தி, துறைமுக நகர அபிவிருத்தி, சுற்றுலா தொழில்துறை, எரிசக்தி துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தௌிவுபடுத்தினார்.

 

பிராந்தியத்தின் சிறந்த முதலீட்டு மையமாக சுற்றுலா தலமாகவும் இலங்கையை மாற்றுவதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்பதையும் கூறினேன். தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் அஹ்மட் அல் செயி, இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் கலீட் அல் அமேரி, வர்த்தகம் மற்றும் வாணிப அலுவல்கள் உதவி அமைச்சர் சயீட் அல் ஹஜேரி, எரிசக்தி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வெளியுறவு உதவி அமைச்சர் அப்துல்லா பெலாலா, வெளியுறவு அமைச்சரின் பிரதி பணிக்குழு பிரதானி அஹ்மட் பர்ஹைமா, வெளியுறவு அமைச்சின் கொள்கை தயாரிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் முஅத் அல் வாரி, வெளியுறவு அமைச்சர் அலுவலகத்தின் ஊடக மற்றும் சிரேஷ்ட நிபுணர் மைதா அல் மயிசோரி, ஆசிய மற்றும் பசிபிக் அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். .

இலங்கைக்குள் தற்போது முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கியுள்ளது - ஜனாதிபதி  எரிசக்தி, சுற்றுலா, முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

ஊடக அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியாக ஊடகவியலாளர்களுக்கான பல திட்டங்கள்

ஊடக அமைச்சின் தலைமையில் ஊடகவியலாளர்களின் தொழில்முறை படிப்புகள், நலன்புரி மற்றும் பிற திறன்களை மேம்படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் பல திட்டங்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஊடக அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியாக ஊடகவியலாளர்களுக்கான பல திட்டங்கள்

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான சர்வதேச கண்காட்சியில் இலங்கை இணைகிறது

பல நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்று வருகின்ற, உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான சர்வதேச கண்காட்சியான Word Expo கண்காட்சியில், இலங்கையின் சுற்றுலா, கலாச்சாரம், சுதேச மருத்துவம், தேயிலை மற்றும் ஆடை உள்ளிட்ட துறைகளில் இலங்கையின் அடையாளத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான சர்வதேச கண்காட்சியில் இலங்கை இணைகிறது

உங்களுக்கொரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்' வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றுக்கு வழங்குகின்ற உதவு தொகையை அதிகரித்தல்

வறிய அல்லது குறைந்த வருமானம் கொண்டவர்களின் வீட்டுப் பிரச்சினைக்கும் அதுசார்ந்த வறுமையைக் குறைக்கும் நோக்கில் 'உங்களுக்கொரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்' வீடமைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

உங்களுக்கொரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்' வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீடொன்றுக்கு வழங்குகின்ற உதவு தொகையை அதிகரித்தல்