மகாவலி குடியேற்றங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை மேம்படுத்துவதற்காக வேண்டி, மகாவலி C வலயத்தில் உள்ள 10 குளங்களில் 15 இலட்சம் மீன் குஞ்சுகள் இடப்பட்டுள்ளன.

மகாவலி குடியேற்றங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை மேம்படுத்துவதற்காக வேண்டி, மகாவலி C வலயத்தில் உள்ள 10 குளங்களில் 15 இலட்சம் மீன் குஞ்சுகள் இடப்பட்டுள்ளன.
அதிகமான இலங்கை இளைஞர் யுவதிகள் ஜப்பானில் விவசாயத்துறையில் பணியாற்றுவதாகவும் மேலும் இந்த சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியும் என்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமட்டா அகியோ தெரிவித்தார்.
கதிர்காம நகரம் நாட்டின் முக்கிய நகரமாக மாற்றப்படும் - வர்த்தக, வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன
இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ட்ரின் தி டாம் (Trinh Thi Tam) அவர்கள் நேற்று (24) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
தேர்தல் இணைய சேவைகள் குறித்து பூர்வீகக் குடிமக்கள் மற்றும் பூர்வீகக்குடி பள்ளி மாணவர்களுக்கு அறிவூட்டும் நிகழ்வு தம்பானை கனிஷ்ட பாடசாலையில் சமீபத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி ஆலோசகராக (ஊடக) பிரபல ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபுஆரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் நோன்பு காலத்திற்கு தயாராகும் முஸ்லிம் சமூகத்தை ஆதரிப்பதற்காக, ஹப்புத்தளை, தியத்தலாவை மற்றும் கஹகொல்ல ஜும்மா பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம்பழங்களை விநியோகிக்கும் திட்டத்தை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் 2025 பெப்ரவரி 24 அன்று முன்னெடுத்தனர்.
இலங்கையில் உள்ள கனடா எல்லை சேவைகள் நிறுவனத்தின் இணைப்பு அதிகாரி திருமதி கசுமி குபோ அவர்கள் 2025 பெப்ரவரி 19, அன்று யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]