Clean Sri Lanka திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (2025.01.09) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Clean Sri Lanka திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (2025.01.09) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2025 ஜனவரி 8 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 40 வது நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டணம் திருத்தம் தொடர்பாக கிழக்கு மாகாண பொதுமக்களின் ஆலோசனையினை கேட்கும் கலந்துரையாடல் மட்டக்களப்பில் நேற்று (08) நடைபெற்றது. முன்மொழியப்பட்ட மின்சார கட்டணம் தொடா்பான ஆலோசனைகளைக் கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் லலித் சந்திரலால் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
தைப்பொங்கல் விழா, மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களுக்காக ஏற்படவுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை புகையிரத சேவை கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறை வரையும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையும் விசேட புகையிரத போக்குவரத்து திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஊவா மாகாண பிரதம செயலாளராக எம். எல். கம்மம்பில நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற் பயிற்சித் தொடர்பான விசேட நிகழ்ச்சி நாளை (10) ஹோமாகம பிரதேச செயலகத்தில் நாள் முழுதும் நடைபெறவுள்ளது என கொழும்பு மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் வாழும் மக்களுக்கு தரமான, சிறந்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இலவச சுகாதார சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்து முக்கிய துறைகளில் நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வழமையான ஒழுங்கில் பரீட்சைகளை நடத்துவதற்கும் பாடசாலை தவணைகளை வழமை போன்று நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனவரி 8ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ,நேற்று (ஜன 08) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் தூயகொந்தாவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]