களுத்துறை மாவட்ட பேருந்துகளை ஒருங்கிணைந்த கால அட்டவணையில் இயக்கும் முதல் கட்டம் ஆரம்பம்

களுத்துறை மாவட்ட பேருந்துகளை ஒருங்கிணைந்த கால அட்டவணையில் இயக்கும் முதல் கட்டம் ஆரம்பம்
"பட்டதாரி தொழில்முனைவோர் உதயம் 2025" - Brain into Business நிகழ்ச்சித் திட்டம் அண்மையில் களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பீடத்தில் நடைபெற்றது.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 485 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
பல் செயற்பாட்டு அபிவிருத்தித் திட்டமாக நிருமாணம் நடைபெறும் மகாவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கீழ் மல்வத்து ஓயா நீர்த் தேக்கத்தின் நிருமாணப் பணிகளை காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்தியர் சுனில் ரணசிங்க அண்மையில் மேற்பார்வை செய்தார்.
இலங்கையின் வானிலை திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அங்கமாக புத்தளத்தில் அமைக்கப்பட்டுவரும் டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பு திட்ட தளத்தை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேற்று (ஜூலை 05) பார்வையிட்டார். ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் இந்த திட்டம், எதிர்காலத்தில் நாடளாவரீதியில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதையும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
திட்ட தளத்திற்கு வந்த பாதுகாப்பு செயலாளரை வானிலை ஆராய்சசி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க அன்புடன் வரவேற்றார். இலங்கையில் இயற்கை பேரழிவுகளைத் தாங்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பாதுகாப்பு அமைச்சுக்கும் வானிலை ஆராய்ச்சி துறைக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை இந்த விஜயம் எடுத்துக்காட்டுகிறது.
டொப்ளர் ரேடார் வலையமைப்பை செயல்படுத்துவது, அதிலிருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்தும் என்றும், இதனால் பாதகமான வானிலை விளைவுகளிலிருந்து உயிர் மற்றும் சொத்து அழிவுகளை குறைக்க காத்திரமான முன் எச்சரிக்கைகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி அனர்த்த முகாமைத்துவ அமைப்புகளை நவீனமயமாக்குவதற்கும் ஜப்பானுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் உதவும் என குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர், இது தொடர்பில் ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவை மிகவும் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. கருணாதிலக்க, வானிலை ஆராய்ச்சி துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சர்வதேச பிரதிநிதிகளாக ஜப்பான் வானொலி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் ஹசாமா ஆண்டோ கார்ப்பரேஷனின் திட்ட முகாமையாளர் தனகா ஷுமேய் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்தத் திட்டத்தில் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதில் உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர்களின் பங்கேற்பு எடுத்துக்காட்டுவதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வானிலை அறிவியல் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இந்தத் திட்டம், நாட்டின் வானிலைத் திறன்களை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், காலநிலை தொடர்பான தாக்கங்களுக்கு மீள்தன்மையை அதிகரிப்பதற்கும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மற்றொரு சிறந்த திட்டமாக அமையும்.
பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்தன அவர்களுக்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்தொகுதியினருக்கும் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில் பாராளுமன்ற செயலகம் கீழ்வரும் விடயங்களை வலியுறுத்துகின்றது.
குருநாகல் மாவட் அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை
சுகாதார சேவை என்பது வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், சிறந்த நிர்வாகமும், முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பும் அத்தகைய சமூகத் தேவைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அவசியம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டலை வழங்கும் ஒரு நாள் பயிற்சி செயலர்வு அண்மையில் (05) பல்லேகலை மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கம்பஹா மாவட்டத்தின் மஹர பிரதேச செயலாளர் பிரிவின் அமுனுகும்புர தெற்கு கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள விவசாயிகளுக்கான சேதனப் பசளை உற்பத்தித் திட்டம் அண்மையில் அமுனுகும்புர பிரிவில் நடைபெற்றது.
விபத்து தடுப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், தேசிய விபத்து தடுப்பு ஆலோசனைக் குழுவின் (NCPI) வழிகாட்டலின் கீழ், சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புக்கான மையப் பிரிவான தொற்றா நோய்கள் பிரிவு, ஆண்டுதோறும் ஜூலை மாத ஆரம்பத்தின் முதலாவது திங்கள் முதல் வெள்ளி வரை தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பத்தாவது (10) முறையாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், 2025 ஜூலை 7 முதல் 10 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]