All Stories

ரிதியகமவில் மூன்று மாத சிங்கக் குட்டிகளுக்குப் பெயர் சூட்டப்பட்டது

அம்பலாந்தோட்டை - ரிதியகம சஃபாரி பூங்காவில் மூன்று மாத வயதுடைய ஆறு சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிடும் விழா நேற்று (12) நடைபெற்றது.

ஆறு சிங்கக் குட்டிகளுக்காக 4000 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதுடன் அதில் தெரிவுசெய்யப்பட்ட ஆறு பெயர்களை சூட்டும் நிகழ்வு மிருகக் கட்சிசாலைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். சி. ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. 

ரிதியகமவில் மூன்று மாத சிங்கக் குட்டிகளுக்குப் பெயர் சூட்டப்பட்டது

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தைப்பூச நாளில் ஏடுதொடக்கல் நிகழ்வு

இந்துக்களின் முக்கிய சமயச் சடங்குகளில் ஒன்றான தைப்பூச நிகழ்வு நேற்று (11) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தைப்பூச நாளில் ஏடுதொடக்கல் நிகழ்வு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) மற்றும் தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி பளை மற்றும் முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம்

கிளிநொச்சிக்கு நேற்று முன் தினம் (09) விஜயம் மேற்கொண்டிருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு நிலையத்தின்  நிலைமைகளை பார்வையிட்டு கலந்துரையாடினார்.
 
கிளீன் சிறிலங்கா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் குறித்த புகையிரத நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர், பயணிகளுடனும் கலந்துரையாடினார்.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் நாடு முழுவதும் காணப்படுகிறது. அது போல கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஊதியம் போதாது. அவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.
 
அந்த பிரச்சினைக்கு மக்களுடனும் கலந்துரையாடி தீர்வு எட்டப்பட வேண்டும். அதனை விரைவில் செய்வோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கிளிநொச்சி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத விடயம் தொடர்பில் அமைச்சர் அவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர்  உடனடியாக சுகாதார அமைச்சுக்கு தகவல் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு ஆய்வு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று (10) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது, கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு ஆய்வு விஜயம்

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர், மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையில் அறிமுகம் கலந்துரையாடல் 

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடனான கலந்துரையாடல் (07) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர், மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையில் அறிமுகம் கலந்துரையாடல்