All Stories

கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்பயிர்ச் செய்கை அழிவு தொடர்பில் மதிப்பீடு

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கை அழிவு தொடர்பில் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதக் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்பயிர்ச் செய்கை அழிவு தொடர்பில் மதிப்பீடு

சுய தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (30) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

சுய தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்

15,000 தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்

நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான வேலைத்திட்டம் இன்று (30) மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டது.

15,000 தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்

நுவரெலியா, சாந்திபுர 'ஈகிள்ஸ்' பார்வையிடும் மத்திய நிலையம் திறக்கப்பட்டது

நுவரெலியாவில் உள்ள சாந்திபுர ஈகிள்ஸ் பார்வை மையம் நேற்று (26) அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதையும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 'ஈகிள்ஸ்' பார்வையாளர் மையம் கட்டப்பட்டுள்ளது.

அந்த மத்திய நிலையத்திலிருந்து, நுவரெலியா நகரம், கிரகரி ஏரி, ஹக்கல, ஏழு கன்னி மலைத்தொடர் உள்ளிட்ட பல சிறப்பு இடங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் வாய்ப்பு பெறுவார்கள்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான டிக்கெட்டுகள் QR முறை மூலம் மட்டுமே வழங்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .

நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு

நுவரெலியா, சாந்திபுர 'ஈகிள்ஸ்' பார்வையிடும் மத்திய நிலையம் திறக்கப்பட்டது

அரசாங்கம் கொள்வனவு செய்யும் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் நெல்லை பாதுகாப்பான இருப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சாந்த ஜயரத்ன

இந்த ஆண்டு பெரும்போகத்தின் நெல் அறுவடையைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்யும் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் நெல்லை பாதுகாப்பான இருப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சாந்த ஜயரத்ன தெரிவித்தார்.

அரசாங்கம் கொள்வனவு செய்யும் மூன்று இலட்சம் மெட்ரிக் டொன் நெல்லை பாதுகாப்பான இருப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சாந்த ஜயரத்ன

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருடன் அரசு நிறுவன மற்றும் சுற்றுலா சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பு

சுற்றுலாத் துறையை எதிர்காலத்தில் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தை நனவாக்கும் நோக்கில், இன்று (23) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல தரப்பினரின் பங்கேற்புடன் சந்திப்பு நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டம். கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அரசு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுற்றுலா தொடர்பான சங்கங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருடன் அரசு நிறுவன மற்றும் சுற்றுலா சங்கங்களின் பிரதிநிதிகள்  சந்திப்பு