All Stories

தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் கொண்டாடப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தினம்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக டிசம்பர் 03 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டதை அடுத்து தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் தினம் (24) இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் கொண்டாடப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தினம்

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று (25) மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

மலேரியா நோய் மீண்டும் பரவும் ஆபத்து

கிளிநொச்சியில் மாவட்டத்தில், மீண்டும் மலேரியா நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி அருமைநாதன் நிமால் தெரிவித்தார்

நேற்று முன்தினம் (20) கிளிநொச்சியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 19ஆம் திகதி மலேரியா தொற்றுடன் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 12ம் திகதி ஆபரிக்க நாடான கானாவிலிருந்து இங்கு வந்து காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வந்த வேளையிலே இவர்  மலேரியா  தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது இலங்கை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார தாபனத்தினால் கூறப்பட்டுள்ளது. ஆனால் எம்மை சுற்றியுள்ள நாடுகளினால் எமக்கு ஆபத்துள்ளது.

மாலைதீவு தவிர்ந்த தூர கிழக்கு மற்றும் ஆபிரிக்,தென்னாசிய நாடுகளில் இன்னும் உள்ளது.எனவே இலங்கையிலிருந்து குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எனவே மக்கள் இவ்வாறான நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அனுகி குறித்த நாடுகளுக்கு சென்று வந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

மலேரியா நோய் மீண்டும் பரவும் ஆபத்து

பலாகல, யானை மனித மோதலுக்கு தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கலந்துரையாடல்

அனுராதபுரம், பலாகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையான, யானை மனித மோதலுக்கு நிரந்தர தீர்வை வழங்கும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று டிசம்பர் 16 ஆம் திகதி பலாகல பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பலாகல, யானை மனித மோதலுக்கு தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கலந்துரையாடல்

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு வேலைத்  திட்டத்தின் கீழ் 60,000 வீடுகள் ஒரே நாளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு விசேட ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகேயின்  ஆலோசனைக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு வேலைத்  திட்டத்தின் கீழ் 60,000 வீடுகள் ஒரே நாளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன

இன நல்லுறவுக்கான அரச உத்தியோகத்தர்களது நட்பு ரீதியான சந்திப்பு

அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்ற தமிழ் சிங்கள பாடநெறிகளில் கலந்து கொள்ளும் உத்தியோகத்தர்களது இன நல்லுறவுக்கான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் மட்/மம/காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் அரசரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியர்களான எம்.எம்.செய்னுதீன் மற்றும் பி.எம்.பிரியதர்ஷினி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இன நல்லுறவுக்கான அரச உத்தியோகத்தர்களது நட்பு ரீதியான சந்திப்பு